பாலியல் வல்லுறவை புகார் செய்ததால் ஆத்திரமடைந்து, 16 வயது சிறுமி எரித்துக் கொலை

ஜார்கண்ட்: 16 வயது சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டு எரித்துக் கொலை

பட மூலாதாரம், Reuters

தங்களுடைய 16 வயது மகள் பாலியில் வன்புணர்வு செய்யப்பட்டதாக பெற்றோர் ஊர் பெரியவர்களிடம் புகார் அளித்த பின்னர் ஜார்கண்டை சேர்ந்த அந்த சிறுமி உயிருடன் எரித்து கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தில் தொடர்புள்ளதாக சந்தேகிக்கப்படும் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறுமியின் பெற்றோர் கூறியதை கேட்ட ஊர் பெரியோர் பாலியில் வன்புணர்வு செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு 100 முறை உட்கார்ந்து எழுந்திருக்கவும், ஐம்பதாயிரம் ரூபாயை குற்றத்திற்கான அபராதமாக செலுத்தவும் உத்தரவிட்டதாக போலீசார் கூறுகின்றனர்.

இந்த தண்டனையால் ஆத்திரமடைந்த அவர்கள் சிறுமியின் பெற்றோரை தாக்கியத்துடன், அந்த சிறுமியை தீ வைத்து கொன்றதாக கூறப்படுகிறது.

"சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததாக குற்றச்சாட்டப்படும் இருவர் சிறுமியின் பெற்றோரை தாக்கியவிட்டு, அங்கிருந்து விரைந்து சென்று வீட்டில் இருந்த சிறுமியை தங்களது கூட்டாளிகளின் உதவியோடு தீ வைத்து கொளுத்தினர்" என்று உள்ளூர் காவல்நிலைய அதிகாரியான அசோக் ராம் என்பவர் ஏ.எஃப்.பி செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.

ஜார்கண்ட்: 16 வயது சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டு எரித்துக் கொலை

பட மூலாதாரம், Getty Images

சிறுமியின் பெற்றோர் திருமணம் ஒன்றில் பங்கேற்பதற்காக வெளியே சென்றபோது, அந்த சிறுமி தனது வீட்டில் இருந்து கடத்தப்பட்டதாக நம்பப்படுகிறது.

ராஜ கெண்டுவா கிராமத்திற்கு அருகே உள்ள காட்டுப்பகுதியில் சிறுமியை இருவர் பாலியல் வன்புணர்வு செய்ததாக உள்ளூர் காவல்துறையினர் கூறினர்.

இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர், சந்தேகத்திற்குரிய குற்றவாளிகளுக்கு எதிராக ஊர் பெரியவர்களிடம் புகார் அளித்துள்ளனர்.

சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, பின்னர் எரித்து கொலை செய்த சம்பவத்தில் தொடர்புடையவர்களாக கருதப்படும் 18 பேரில் 14 பேரை கைதுசெய்துள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.

சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததாக குற்றச்சாட்டப்படும் இருவரில் ஒருவர் இன்னும் கைதுசெய்யப்படவில்லை.

சட்டவிரோதமாக உத்தரவுகளை வழங்கிய ஊர் பெரியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு இந்தியாவில் சுமார் 40,000 பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஆனாலும், பாலியல் வன்புணர்வு மற்றும் பாலியல் தாக்குதல் சார்ந்த பல சம்வங்களால், பின்னர் தங்களுக்கு ஏற்படும் சிக்கல்கள் காரணமாக வெளியே தெரிவிக்கப்படுவதில்லை என நம்பப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: