தலைமை நீதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான மனுவை ரத்து செய்தது ஏன்? வெங்கையா நாயுடு விளக்கம்

பட மூலாதாரம், Getty Images
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவர எதிர்க்கட்சிகள் சார்பில் தாக்கல் செய்த மனுவை துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு ரத்து செய்தார்.
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சமர்பித்த மனுவில், காரணங்கள் வலுவாக இல்லை என்பதால் மனு ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏழு எதிர்க்கட்சிகளை சேர்ந்த 71 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனுவில் கையெழுத்திட்டிருந்தனர்.
நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கான காரணங்கள், விரிவான ஆலோசனைகள் மற்றும் அரசியலமைப்பு நிபுணர்களின் கருத்துகளுக்கு பிறகு இந்த மனுவை ரத்து செய்வதாக வெங்கையா நாயுடு தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து முன்னாள் மக்களவை செயலர் சுபாஷ் கஷ்யப்பிடம் வெங்கையா நாயுடு ஆலோசனை செய்ததாக பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், NALSA.GOV.IN
பிபிசியிடம் பேசிய கஷ்யப், எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மான மனுவை துணை ஜனாதிபதி ரத்து செய்தார். அரசியல் காரணங்களால் இந்த மனு கொண்டுவரப்பட்டதால் இது ரத்து செய்யப்பட்டது என்று தெரிவித்தார்.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்து மட்டும் இதற்கு போதாது வலுவான காரணங்களும் தேவை என்றும் அவர் தெரிவித்தார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் வேண்டி மனு தாக்கல் செய்யப்பட்டது இதுவே முதல்முறையாகும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












