“ஏமாற்றுவதற்குப் பெயர் மாற்றினாலும் நோக்கம் ஒன்றே”
15ஆவது நிதிக் குழுவின் பரிந்துரையில் மக்கள் தொகை கட்டுப்பாட்டில் சிறந்து விளங்கிய மாநிலங்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
இது பாஜக தென்னிந்தியாவில் ஆதரவு பெறுவதற்கான முயற்சியா? தென் மாநிலங்களின் உணர்வுகளுக்கு மத்திய அரசு மதிப்பளிக்கிறதா? என்று பிபிசியின் வாம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.
இதற்கு பிபிசி தமிழின் நேயர் சமூக வலைதளங்களில் பதிவிட்ட கருத்துக்களை தொகுத்து வழங்குகின்றோம்.
துரை முத்துசெல்வம் என்ற நேயர், ஊக்கத்தொகை என்று தென் மாநிலங்களின் காதில் பூ வைக்கிறார் மோடி. அப்படி மக்கள் தொகை அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டால்தான் தேசத்திற்கு நல்லது என்றால் மக்கள் தொகை அடிப்படையில் மத்திய அரசு வரி வசூலித்துக்கொள்ள வேண்டும் என்று கருத்து தெரிவிததுள்ளார்.
டுவிட்டரில் தன்னுடைய கருத்தை பதிவிட்டுள்ள அகிலன், இரண்டுமில்லை தென்மாநிலத்தில் வாங்கிய அடியின் வெளிப்பாடு என்று கூறியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
சரோஜா சுப்பிரமணியம் என்கிற நேயரோ, மோடி வெறும் சொல் வீரர்தான், செயல் வீரர் அல்ல, அப்படி செயலில் காட்டியிருந்தால் ஏன் மோடி எதிர்ப்பு அலை வருகிறது? என்று கேள்வி எழுப்பி கருத்து கூறியுள்ளார்.
ஜிப்ரான் என்ற நேயர், எங்களை இலவசம் என்ற பெயரால் கெடுத்தது போதாதென்று இப்போது ஊக்கமா....நீங்கள் ஏமாற்றுவதற்கு பெயர் மாற்றினாலும் உங்களின் நோக்கம் ஒன்றே.... என்று கருத்து எழுதியுள்ளார்.

மணிகண்டன் என் என்கிற நேயர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெறும் வாக்குறுதியை வைத்து ஒன்னும் பண்ணமுடியாது! அரசிதழில் வெளியிட்டு நிதி பங்கீட்டை வெளிப்படையா அறிவிக்கனும்.! என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
மோடியும் எதை எதையோ கையில் எடுத்துப்ப் பார்க்கிறார். ஆனால் தாமரை மலர்வதற்கான அறிகுறியும் காணோம். மக்களின் நன்மை எது என்று தெரிந்து கொண்டாலே தமரை மலர்ந்து விடும் என்று ஆோசனை வழங்குவதுபோல கருத்து பதிவிட்டுள்ளார்,

கௌதம் என்கிற நேயர் தன்னுடைய கருத்தாக, செய்வோம் செய்வோம் என்கிற வார்த்தை அலுத்துவிட்டது. 'செய்தோம்' 'செய்து கொண்டிருக்கிறோம்' இந்த வார்த்தைகள் எப்பொழுது வருமோ? என்று குறிப்பிட்டுள்ளார்,
செந்தில் குமார் என்பவர் "பொய் சொல்கிறார்" என்று இரண்டு சொற்களில் தன்னுடைய கருத்தை பதிவிட்டுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












