தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறியது தெலுங்குதேசம்

பட மூலாதாரம், ANDHRAPRADESHCM / FACEBOOK
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தெலுங்குதேசம் வெளியேறியுள்ளதாக அந்த கட்சியின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
காலையில் நடைபெற்ற தொலை கலந்துரையாடலில் (டெலி கான்பரன்ஸ்) இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், பாரதிய ஜனதா கட்சி தலைவர் உள்பட எல்லா கட்சிகளுக்கும் இது குறித்து கடிதம் அனுப்பியிருப்பதாகவும் சில நிமிடங்களுக்கு முன்னால் தெலுங்குதேசம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.எம். ரமேஷ் தெரிவித்திருக்கிறார்.
பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஜெகன் மோகன் ரெட்டி வழங்கிய நம்பிக்கையில்லா தீர்மானத்தை அவர் வாபஸ் பெறலாம் என்ற சந்தேசம் எழுந்துள்ளதால், நாங்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எண்ணியுள்ளோம் என்றும் சி.எம். ரமேஷ் கூறியுள்ளார்.
"இன்று ஜெகன் மோகன் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால், அதற்கு நாங்கள் ஆதரவு அளிப்போம். அவ்வாறு நடைபெறாவிட்டால் 54 நாடாளுமன்ற உறுப்பினர்களால் கையெழுத்திடப்பட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்








