விவசாயிகளுக்கு 8 ஆயிரம் கோடி பயிர்க்கடன்: நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு
முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.
’தி இந்து’ தமிழ்

பட மூலாதாரம், Getty Images
விவசாயிகளுக்கு 8 ஆயிரம் கோடி பயிர்க்கடன் என்ற தலைப்பில் 2018-19 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை தமிழக சட்டசபையில் தாக்கல் செய்ப்பட்டத்தை முதல் பக்க செய்தியாக ’தி இந்து’ (தமிழ்) வெளியிட்டுள்ளது.
பள்ளிக்கல்விக்கு 27,205 கோடி, அம்மா தாய்-சேய் நல ஊட்டசத்து பெட்டகம் அறிமுகம், 2 லட்சத்து 30 ஆயிரம் குடும்பங்களுக்கு வீடு விவசாயிகளுக்கு 8 ஆயிரம் கோடி பயிர்க்கடன், 3000 புதிய பேருந்துகள் உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த தமிழக பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.
வியாழக்கிழமை தொடங்கிய தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில், 2018-19 நிதியாண்டக்கான நிதிநலை அறிக்கையை துணை முதல்வரும், நிதியமைச்சருமாக ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

பட மூலாதாரம், MONEY SHARMA/AFP/Getty Images)
ராணுவத்தில் 5 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கே மத்திய மற்றும் மாநில அரசுகள் வேலை வழங்க வேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக்குழு அளித்துள்ள பரிந்துரையில் தெரிவித்துள்ளதாக 'தி இந்து' தமிழில் செய்தி வெளியாகியுள்ளது.
பாதுகாப்பு துறையில் ஊழியர், வீர்ர்கள் பற்றாகுறையை காரணம் காட்டி இந்தப் பரிந்துரை வழங்கப்பட்டுள்ளதாக இந்த செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.

தினமலர்

பட மூலாதாரம், MONEY SHARMA
இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் தோல்வி அதிர்ச்சி அளிக்கிறது என்றும், முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது சொந்த தொகுதியில் பாஜகவை வெற்றி பெற வைக்க முடியவில்லையே என்றும் அக்கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி விமர்சித்துள்ளதாக 'தினமலர்' செய்தி வெளியிட்டுள்ளது.
வெற்றி பெற வைக்க முடியாதவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுப்பது பற்றி பா.ஜ. ஆட்சி மன்றக் குழு மறுபரிசீலனை செய்ய வேண்டும் அவர் கூறியிருப்பதாக இந்த செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.

’டெக்கான் குரோனிக்கல்’

மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவதற்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மக்களவை செயலரிடம் நோட்டீஸ் வழங்கியுள்ளதாக 'டெக்கான் குரோனிக்கல்' செய்தி வெளியிட்டுள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை நடைபெறும் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தன்னுடைய ஆதரவை அளிக்க தெலுங்கு தேசம் முடிவு செய்துள்ளது.
இதனை கொண்டு வருவதற்கு வழங்கப்பட்டுள்ள அறிவிப்பை சபாநாயகர் மக்களவையில் அறிவிப்பார். பின்னர், அதற்கு எத்தனை பேர் ஆதரவு அளிக்கிறார்கள் என்று அவர் கேட்பார் என்று இந்த செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.

தினமணி

பட மூலாதாரம், Getty Images
காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்ற இந்திய உச்ச நீதிமன்ற தீர்ப்பை உடனே நடைமுறைப்படுத்த தமிழக சட்டசபையில் வியாழக்கிழமை ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த இந்த தீர்மானத்திற்கு திமுக உள்பட அனைத்துக் கட்சிகளும் முழு ஆதரவு தெரிவித்திருப்பதாகவும் இந்த செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












