நாளிதழ்களில் இன்று: சென்னை அருகே பழங்கற்கால கருவிகள்: மீண்டும் அகழாய்வுக்கு அனுமதி
முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - `பழங்கற்கால கருவிகள்: மீண்டும் அகழாய்வுக்கு அனுமதி'

சென்னையிலிருந்து 60 கி.மீ தொலைவில் உள்ள திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த பட்டறைபெரும்புதூர் கிராமத்தில் அகழாய்வு நடத்த தொல்லியல் மத்திய அரசு ஆலோசனைக் குழு அனுமதி வழங்கியதை அடுத்து தமிழக தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொள்ளும் பணியில் இறங்கி உள்ளதாக ’தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு அங்கு நடந்த அகழ்வாய்வில் பழங்கற்கால கருவிகள் கண்டெடுக்கப்பட்டன என்று விவரிக்கிறது அச்செய்தி.

தினத்தந்தி : 'நாடளுமன்றத்தில் கட்சிகளின் நிலவரம்'

பட மூலாதாரம், Getty Images
இடைத்தேர்தல் முடிவுகள் தொடர்பான செய்திதான் தினத்தந்தி நாளிதழில் முதல் பக்கத்தில் இடம்பிடித்துள்ளது. உத்தரபிரதேசம், பீகார் மாநிலங்களில் 3 எம்.பி தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா தோல்வி அடைந்தது. உ.பி.யில் சமாஜ்வாடி கட்சியும், பீகாரில் லாலு கட்சியும் வெற்றி பெற்று உள்ளன என்று கூறும் அச்செய்தி, நாடாளுமன்றத்தில் தற்போதைய கட்சிகளின் நிலவரம் குறித்து விவரிக்கிறது.
மொத்த இடங்கள் - 543
காலி இடங்கள் - 5
பா. ஜனதா - 274
காங்கிரஸ் - 48
அ.தி.மு.க. - 37
திரிணாமுல் காங்கிரஸ் - 34
பிஜூ ஜனதாதளம் - 20
சிவசேனா - 18
தெலுங்கு தேசம் - 16
டி.ஆர்.எஸ். கட்சி - 11
மார்க்சிஸ்ட் கம்யூ. - 9
ஒய்.எஸ்.ஆர். காங். - 9
சமாஜ்வாடி கட்சி - 7
லாலு கட்சி - 4
பிற கட்சிகள் - 51

தி இந்து (ஆங்கிலம்) - 'விசாரணை குழு முன் மருத்துவர் ஆஜர்'

பட மூலாதாரம், Getty Images
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் முன்பு இரண்டாவது முறையாக ஜெயலாலலிதாவின் கடைசி நிமிடங்களில் உடனிருந்த பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் சிவக்குமார் ஆஜரானார் என்கிறது தி இந்து.


பட மூலாதாரம், தி இந்து

டெக்கான் க்ரானிக்கல் - 'மாறன் சகோதர் விடுவிப்பு'
பிஎஸ்என்எல் இணைப்பை முறைகேடாக பயன்படுத்தியாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் இருந்து தொழிலதிபர் கலாநிதி மாறன், முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் உள்ளிட்ட 7 பேரை விடுவித்து சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்ததாக முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது ’டெக்கான் க்ரானிக்கல்’ நாளிதழ்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












