திருமண பரிசாக வந்த வெடிகுண்டு: உயிரிழந்த மணமகன்

கோப்புப்படம்

பட மூலாதாரம், ROBERTO SCHMIDT

படக்குறிப்பு, கோப்புப்படம்

ஒடிஷாவில் திருமண பரிசை திறந்தபோது குண்டு வெடித்ததில், மணமகன் மற்றும் அவரது பாட்டி ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.

குண்டுவெடிப்பில் உயிரிழந்தவரின் மனைவி படுகாயம் அடைந்துள்ளார்.

பிப்ரவரி 18ஆம் தேதியன்று சௌமியா ஷேகர் என்பவருக்கும் ரீமா சாஹூ என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.

திருமண வரவேற்பு முடிந்த ஒருசில நாட்களுக்கு பிறகு அவர்களுக்கு ஒரு திருமண பரிசு வந்திருந்தது.

யார் அனுப்பியது என எந்தப் பெயரும், முகவரியும் குறிப்பிடாமல் வந்திருந்த பரிசுப்பெட்டியில் உண்மையான வெடிகுண்டு இருந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அதனை திறந்தவுடனேயே குண்டு வெடித்தது என, உள்ளூர் ஊடகங்களிடம் உறவினர்கள் தெரிவித்தனர்.

காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சாஹூ மற்றும் அவரது பாட்டி ஜெமமணி சாஹூ ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.

இத்தாக்குதலுக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்று கூறியுள்ள காவல்துறை, அதே பகுதியில் இருக்கும் ஒருவர்தான் இதனை செய்திருக்கக்கூடும் என்று சந்தேகிப்பதாக தெரிவித்தனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :