தொடங்கியது கமலின் அரசியல் பயணம் (புகைப்பட தொகுப்பு)

இன்று தனது அரசியல் பயணத்தை தொடங்கினார் கமல். ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாமின் இல்லம், பின் மீனவர்களுடன் சந்திப்பு, பரமக்குடியில் பொதுகூட்டம் என தொடர்ந்த இந்த பயணத்தில் அடுத்ததாக மதுரையில் நடைபெறும் கூட்டத்தில் தனது கட்சி பற்றியை அறிவிப்பு வெளியிடுகிறார் கமல்.

கலாம் வீட்டில் தொடங்கிய அரசியல் பயணம்
படக்குறிப்பு, ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாம் இல்லத்தில் இருந்து இன்று தனது அரசியல் பயணத்தை தொடங்கினார் கமல்
கலாம் வீட்டில் தொடங்கிய அரசியல் பயணம்
படக்குறிப்பு, அப்துல் கலாமின் குடும்பத்தினருடன்
கலாம் குடும்பத்துடன் சிறிது நேரம் உரையாடிய கமல், அவர்களுடன் சிற்றுண்டி அருந்தினார்
படக்குறிப்பு, கலாம் குடும்பத்துடன் சிறிது நேரம் உரையாடிய கமல், அவர்களுடன் சிற்றுண்டி அருந்தினார்
கலாம் வீட்டில் தொடங்கிய அரசியல் பயணம்
படக்குறிப்பு, இந்த சந்திப்புகளில் 'நம்மவர்' என்று அழைக்கப்பட்டார் கமல்
மீனவ பிரதிநிதிகளை சந்தித்த கமல் பொன்னாடை போர்த்த வந்தபோது, `வேண்டாம்` என்று மறுத்து அவர்களை ஆரத்தழுவினார்.
படக்குறிப்பு, மீனவ பிரதிநிதிகளை சந்தித்த கமல் பொன்னாடை போர்த்த வந்தபோது, `வேண்டாம்` என்று மறுத்து அவர்களை ஆரத்தழுவினார்.
மீனவர்கள் சந்திப்புக்கு பிறகு பத்திரிக்கையாளர் சந்திப்பையும் நிகழ்த்தினார் கமல்
படக்குறிப்பு, மீனவர்கள் சந்திப்புக்கு பிறகு பத்திரிக்கையாளர் சந்திப்பையும் நிகழ்த்தினார் கமல்
ராமநாதபுரம் செல்லும் வழியில் பாம்பன் பாலம் மற்றும் மண்டபம் பகுதியில் ரசிகர்கள் திரண்டு இருந்தனர்.
படக்குறிப்பு, ராமநாதபுரம் செல்லும் வழியில் பாம்பன் பாலம் மற்றும் மண்டபம் பகுதியில் ரசிகர்கள் திரண்டு இருந்தனர்.
ராமேஷ்வரத்தில் ரசிகர்களை பார்த்து கையசைத்த கமல்
படக்குறிப்பு, "நான் உங்கள் வீட்டு விளக்கு இந்த விளக்கை ஏற்றி வைக்க வேண்டியது உங்கள் பொறுப்பு" என்று ராமநாதபுரம் பொதுக்கூட்டத்தில் பேசினார் கமல்.
கமலை வரவேற்க நடந்த கொண்டாட்டம்
படக்குறிப்பு, கமலை வரவேற்க நடந்த ஆட்டம் பாட்டம்
கமலை வரவேற்க நடந்த கொண்டாட்டம்
படக்குறிப்பு, பரமக்குடியில் அமைக்கப்பட்டிருந்த மேடை
கமலை வரவேற்க நடந்த கொண்டாட்டம்
படக்குறிப்பு, ராமேஸ்வரத்திலிருந்து ராமநாதபுரம் செல்லும் சாலையின் இரண்டு பக்கத்திலும் 'நாளை நமதே` என்று பெயர் பொறித்த கொடிகள் கட்டப்பட்டிருந்தன
இன்று உலக தாய் மொழி தினம் என்பதால் இந்த நாளை தேர்ந்தெடுத்ததாக கமல் தெரிவித்தார்
படக்குறிப்பு, இன்று உலக தாய் மொழி தினம் என்பதால் இந்த நாளை தேர்ந்தெடுத்ததாக கமல் தெரிவித்தார்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: