செய்தித்தாளில் இன்று: ''இந்த 18 பேரில் ஒருவருக்கே முதல்வர் வாய்ப்பு''
முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.
தினமணி:

''தமிழகத்தில் தேர்தல் நடைபெறாமலே ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனக்கு முதல்வர் பதவி மீது ஆசையில்லை. ஒருவேளை நாங்கள் ஆட்சிக்கு வந்தால்,என்னை நம்பி வந்த 18 எம்.எல்.ஏக்களில் ஒருவர் கூட முதல்வராகலாம்'' என கதிராமங்கலம் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மீத்தேன் எரிவாயு எடுக்கும் முயற்சியைக் கண்டித்து அப்பகுதி மக்கள் நடத்திவரும் போராட்டத்தில் கலந்துகொண்ட ஆர்.கே நகர் சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரன் பேசியுள்ளார் என்ற செய்தி தினமணியில் வெளியாகியுள்ளது.

தினத்தந்தி:
கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான அரசு, மாநிலத்திற்கு என தனியாக ஒரு கொடியை வடிவமைப்பதற்காக 9 பேர் கொண்ட குழு ஒன்றை உருவாக்கியது. அந்த குழு அதற்கான பரிந்துரை கொண்ட அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துள்ளது என தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

தினமலர்:

பட மூலாதாரம், Dinamalar
மத்திய பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்காக 2,548 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்ற செய்தியும், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 2,500 தமிழ் வார்த்தைகள், அரசாணையாக வெளியிடப்பட உள்ளன என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ள செய்தியும் தினமலரில் இடம்பெற்றுள்ளது.

டைம்ஸ் ஆப் இந்தியா:
50 சதவீத மானியத்துடன் அம்மா இருசக்கர வாகன திட்டத்தில் விண்ணப்பிக்க 10-ம் தேதி வரை காலநீட்டிப்பு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது எனவும், சென்னையில் மட்டும் இத்திட்டத்திற்குக் கிட்டத்தட்ட 23,000 பெண்கள் விண்ணப்பித்துள்ளனர் என்றும், இந்த மானியத்தைப் பெறுவதற்கான தகுதியை அடைவதற்காகக் கடந்த ஆறு நாட்களில் மட்டும் தமிழகத்தில் 91,200 பெண்கள் ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பித்துள்ளதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி கூறுகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












