You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நாளிதழ்களில் இன்று: ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன் போயஸ் கார்டனில் என்ன நடந்தது?
முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.
டைம்ஸ் ஆஃப் இந்தியா - 'போயஸ் கார்டனில் என்ன நடந்தது?'
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி சசிகலா தரப்புக்கு இட்ட உத்தரவு குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில், "சசிகலாதான் ஜெயலலிதா உடன் இருந்தவர். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன் போயஸ் தோட்டத்தில் என்ன நடந்தது என்பது சசிகலாவுக்கு மட்டும்தான் தெரியும். அப்போது பொறுப்பு ஆளுநராக இருந்தவரே ஜெயலலிதாவை மருத்துவமனையில் பார்க்கவில்லை என்று கூறி உள்ளார். சசிகலா இது தொடர்பான பிரமாண பத்திரத்தை ஏழு நாட்களுக்குள் விசாரணை ஆணையத்திடம் அளிக்க வேண்டும்." என்று விவரிக்கிறது அந்த செய்தி.
தி இந்து (தமிழ்) - 'எண்ணெய் விலை: மாற்றுத் திட்டங்கள் தேவை'
எண்ணெய் விலை உயர்வை கட்டுப்படுத்த மாற்றுத் திட்டங்கள் தேவை என்ற தலைப்பில் தலையங்கம் எழுதி உள்ளது தி இந்து தமிழ் நாளிதழ்."சீனாவைப் பின்பற்றி வெளிநாடுகளில் உள்ள எண்ணெய் வயல்களையும் ஏலம் எடுக்க இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும். நமக்குத் தேவைப்படும் எண்ணெயைப் பெருமளவு இறக்குமதி செய்வதைவிட உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கு வழிகளைக் காண வேண்டும். எண்ணெய் மட்டுமல்ல; எரிபொருள் தேவைக்கு மாற்று ஆற்றல்களையும் பயன்படுத்த வேண்டும்." என்கிறது தி இந்து தமிழ் தலையங்கம்.
தினத்தந்தி - 'கர்நாடக முதல்வரை சந்திக்க முடிவு'
காவிரியில் தண்ணீர் திறந்துவிட கோரி கர்நாடக முதல்வர் சித்தராமையாவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க முடிவு செய்திருப்பது தொடர்பான செய்தியை தினத்தந்தி முதல் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. "காவிரி தொடர்பான வழக்கை விசாரித்த காவிரி நடுவர் மன்றம், தமிழநாட்டுக்கு கார்நாடகம் ஆண்டுக்கு 192 டி.எம்.சி தண்ணீரை விடுவிக்க வேண்டும் என்று இறுதி தீர்ப்பு அளித்தது. 2007 - ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5-ம் தேதி வழங்கப்பட்ட இந்த தீர்ப்பின்படி, தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் தண்ணீரை விடுவிப்பது இல்லை.தமிழக அரசு பல முறை வலியுறுத்தியும் காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி நீர் ஒழுங்குமுறை குழுவையும் மத்திய அரசு அமைக்காமல் இழுத்தடித்து வருகிறது." என்று விவரிக்கிறது அந்த செய்தி.
தினமலர் - 'பா.ஜ.க - சிவசேனா கூட்டணி ஆட்சி'
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - 'அரசு கல்லூரி மாணவர் சாதனை'
அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் முதுநிலை நீட் தேர்வில் அரசு கல்லூரி மாணவர் முதல் இடத்தை பிடித்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ். மதுரை மருத்துவக் கல்லூரியை சேர்ந்த ஆர்.மதன் என்ற மாணவர் 1200 -க்கு 925 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளார் என்கிறது அந்தச் செய்தி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்