தனிக்கட்சி தொடங்குவது குறித்து தினகரன் கூறியது என்ன?

தனிக்கட்சி தொடங்குவது குறித்தும், அரசியலில் தனது அடுத்த நகர்வு குறித்தும் நாளை அறிவிப்பேன் என்று ஆர்.கே நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி தினகரன் கூறி உள்ளார்.
புதுச்சேரியில் இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறி உள்ளார்.
எம்.ஜி.ஆரின் பிறந்த நாளான ஜனவரி 17 ஆம் தேதி, தமது அடுத்த அரசியல் நகர்வுகள் குறித்து அறிவிப்பேன் என்று கூறிய அவர்,"இரட்டை இலை சின்னம் குறித்த வழக்கு நீதி மன்றத்தில் உள்ளது. அது எப்போது முடியும் என்று தெரியாது. ஆனால், உள்ளாட்சி தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இப்படியான சூழ்நிலையில் சில முடிவுகள் எடுக்க வேண்டியுள்ளது." என்றார்.
மேலும், 90 சதவிகித தொண்டர்கள் எங்கள் பின்னால் உள்ளதாகவும் கூறினார்.
"இது தொடர்பாக கட்சியின் பொது செயலாளரிடம் (சசிகலா) விவாதித்தேன், அவர், `நீயே நல்ல முடிவா எடு` என்று கூறினார்" என்று தெரிவித்தார்.
பிற செய்திகள்:
- Live: உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கியது
- தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளும் டிரம்ப்: 10 தற்புகழ்ச்சி மேற்கோள்கள்
- ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்
- ''நான் இனவெறியாளன் அல்ல'' : அதிபர் டிரம்ப்
- உணவு பற்றாக்குறை: வட கொரிய மக்கள் என்ன சாப்பிடுகிறார்கள்?
- இந்தியா-இஸ்ரேல் உறவில் நெருக்கடியா?
- உலக வரலாற்றில் பெரிய பணக்காரராக இருந்த முஸ்லிம் மன்னர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்








