"இம் என்றால் சிறைவாசம், ஏன் என்றால் வனவாசம்": ஆதார் நடவடிக்கை குறித்து மக்கள்

பணம் அளித்தால் ஆதார் விவரங்களை பெற முடியும் என்ற செய்தி வெளியிட்ட பத்திரிகை மீது வழக்கு பதிவு. தவறு நடப்பதாக சுட்டிக்காட்டிய பத்திரிக்கையாளர் மீதே நடவடிக்கை எடுப்பது சரியா? உண்மையிலேயே முறைகேடுகள் நடைபெற்றுள்ளதா என்பதை ஆதார் நிறுவனம் விசாரிக்க வேண்டுமா?என்று பிபிசி தமிழின் வாதம்விவாதம் பகுதியில் கேட்கப்பட்ட கேள்விக்கு, நேயர்கள் பதிவிட்ட கருத்துக்களை தொகுத்து வழங்குகிறோம்.

"இம் என்றால் சிறைவாசம், ஏன் என்றால் வனவாசம், ஆங்கிலேயர் காலத்தில் வாழ்கிறோமா என்று சந்தேக மாக இருக்கிறது. ஆதார் நிறுவனம் குற்றச்சாட்டை விசாரிக்க வேண்டும். அதைவிடுத்து வழக்கு போடுவது அபத்தம்." என்கிறார் சரோஜா பாலசுப்ரமணியன்.

புலிவலம் பாட்ஷாவின் கருத்து இது: "தவறுகளை வெளி கொண்டு வந்தவர்களை பாராட்டாமல் இப்படி பொய் வழக்கு போடுவது நாட்டின் வளர்ச்சிக்கு நல்லது இல்லை."

"உண்மை ஆட்சியாளர்களை சுடுகிறது" என்கிறார் செந்தில்குமார்.

ஞானவேலு, "இதுதான் இந்திய அமைப்பு" என்கிறார்.

ஆதார் தொடர்புடையச் செய்திகள்:

பிற செய்திகள்:

சமூகஊடகங்களில் பிபிசி தமிழ் :