You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆதார் அவசியமா? அந்தரங்க உரிமை அவசியமா?
பள்ளி முதல் கல்லூரி வரை, வங்கி முதல் ரேஷன் கார்டு வரை பல இடங்களில் ஆதார் கட்டாயமாக்கப்பட்டு வரும் நிலையில், சமீபத்தில் தனது மொபைல் எண்ணை ஆதாரோடு இணைக்க மாட்டேன் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக, பிபிசி தமிழ் ஃபேஸ்புக் பக்கத்தில் நேயர்களின் கருத்துக்களை பதிவிட செய்யும் "வாதம் விவாதம்" பகுதியில், "ஆதாருடன் மொபைல் எண்ணை இணைப்பது அவசியமா? அந்தரங்க உரிமையை மீறும் செயலா?" என்ற கேள்வியை எழுப்பியிருந்தோம்.
அது பற்றி பிபிசி தமிழ் நேயர்கள் பதிவிட்டுள்ள தேர்ந்தெடுத்த கருத்துக்களை தொகுத்து வழங்குகின்றோம்.
"ஆதார்" குடியுரிமை அடையாள அட்டை இல்லை என்னும் பொழுது, நாம் எதற்காக தனிநபர் அடையாளங்கள் உள்ளடக்கிய தரவலை அரசின் ஒவ்வொரு நலதிட்டத்தின் பலனை பெறுவதற்கும் வழங்கிட வேண்டும்?... நான் ஒரு இந்தியக் குடிமகன் என்பதற்கு வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, இருக்கையில் மூன்றாவது அடையாள அட்டையென்றை குடியுரிமையற்ற ஆதார் திணிப்புக்குகான அவசியமென்ன?... தனியார் நிறுவனங்களின் சேவையை பெறுவதற்கு ஆதார் இணைப்பு கட்டாயாம் என்று சொல்லி எங்களது தரவுகளை தனியாரிடம் கொண்டு சரிபார்ப்பது எத்தகைய பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்ததாக இருக்கும்?"
"ஆதார் அவசிய இல்லையென்று உச்ச நீதிமன்றமும் நடுவண் அரசு அவசியமென்று திணிப்பதும் முரண்பாடற்ற செயலில்லையா?... ஆதார் தெடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிவுவையிலுள்ள நிலையில் நடுவண் அரசு மக்களை வங்கிகள், தொலைதொடர்பு நிறுவனங்களின் மூலம் ஆதார் இணைப்பு கட்டாயத்தை கட்டப்பஞ்சாயத்து மூலம் அடைய நிர்பந்திப்பது இந்திய அரசியல் சட்ட சாசனத்திற்கு எதிரானது இல்லையா?" என்று பல கேள்விகளை எழுப்பி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் சக்தி சரவணன் என்ற நேயர்.
நாட்டின் பாதுகாப்பு கருதி கேட்பதால் கொடுக்கலாம் ஆனால் இதனால் என்ன பின்விளைவுகள் நேர்ந்தாலும் அதற்க்கு அரசு தான் பொறுப்பு என்பதை உணர்ந்து அரசு விழிப்புடன் செயல்பட வேண்டும்," என்று அரசு பொறுப்பேற்கவேண்டும் என்கிறார் ஆனந்த் ரவிச்சந்திரன்.
"முதல்ல ஆதார் அடையாள அட்டையே அவசியமில்லை முட்டாள் தனமான திட்டம் தோல்வி அடைந்த திட்டம் மிகப்பெரிய அளவில் விபரீதத்தை ஏற்படுத்தகூடிய திட்டம்," என்று விமர்சனத்தை முன்வைக்கிறார் ஆசன் ஊட்டி எனும் பயன்பாட்டாளர்.
"வீரமுள்ள பெண்மணி எதிர்கிறார்கள்," என்று மாமதாவை புகழ்கிறார் கண்ணன்.
நாங்களும் இணைக்க மாட்டோம்
"இதை வரவேற்கிறோம் நாங்களும் இணைக்க மாட்டோம்," என்கிறார் என்னங்க சார் உங்க திட்டம் எனும் பெயரில் பதிவிடும் நேயர்.
"தொலைபேசியுடன் ஆதார் எண்ணை இணைப்பதும், திருடனிடம் பர்ஸை தருவதும் ஒன்றே," என்று எள்ளலுடன் விமர்சனம் செய்கிறார் முஹமது புகா.
"ஆதார் வந்த பொழுதே எழுப்ப வேண்டிய குரலை காலம் தாழ்த்தி எழுப்புகிறோம்.," என்று சுட்டிக்காட்டியுள்ளார் சிவசெந்தில் குமார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :