ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

எகிப்து: அதிபரின் முக்கிய போட்டியாளர் விலகல்

இந்த வருடம் நடக்க உள்ள எகிப்து அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என முடிவெடுத்துள்ளதாக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் அகமது ஷபிக் கூறியுள்ளார். எகிப்து அதிபர் அப்துல் ஃபட்டா அல்-சிசிக்கு சவால் தரும் முக்கிய போட்டியாளராக இவர் கருதப்பட்டார்.

காஸாவுக்கு மீண்டும் மின்சாரம்

மின்சார கட்டணத்தை பாலத்தீனியம் கட்டாததால், காஸாவுக்கு நிறுத்தப்பட்ட மின்சார விநியோகத்தை மிண்டும் முழு அளவில் விநியோகிக்க உள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது.

ரொட்டிவிலைஉயர்வுக்கு எதிராகப் போராட்டம்

சூடானில் அரசின் மானியங்கள் நிறுத்தப்பட்டதால் ரொட்டியின் விலை உயர்ந்துள்ளதைக் கண்டித்து நடந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கற்கலை வீசியதுடன், சாலைகளையும் மறித்தனர். இதனால் இவர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுகளை போலீஸார் வீசினர்.

இரான்: ஆங்கிலத்திற்குத் தடை

இரானின் ஆரம்ப பள்ளியில் ஆங்கிலம் கற்பித்தல் தடை செய்யப்பட்டுள்ளதை அந்நாட்டு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இரான் அதி உயர் தலைவர் அயத்துல்லா அலி கமேனி ஆங்கில மொழி கற்பித்தல் குறித்து விமர்சனங்களை வைத்திருந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :