ஆர்.கே.நகர் தொகுதி எம் எல் ஏ ஆகிறார் டிடிவி தினகரன்

ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் அதிமுக வேட்பாளரை காட்டிலும் 40 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று அபார வெற்றி பெற்றுள்ளார்.
தினகரனை எதிர்த்து அதிமுக சார்பில் களமிறக்கப்பட்ட அக்கட்சியின் மூத்த தலைவர் மதுசூதனன் 48,306 வாக்குகள் மட்டுமே படுதோல்வியை தழுவினார்.
திமுக வேட்பாளர் மருது கணேஷ் 24,651 வாக்குகளை பெற்று டெபாஸிட் இழந்தார்.
நோட்டாவிற்கு 2,000க்கும் மேற்பட்டோர் வாக்களித்துள்ளனர்.
சுமார் 40 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தினகரன் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
- டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யூடியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்








