2ஜி வழக்கு: மேல் முறையீடு செய்யப்போவதாக சிபிஐ அறிவிப்பு
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பினை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்படும் என்று மத்தியப் புலனாய்வு அமைப்பு (சிபிஐ) தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
இத் தீர்ப்பை பற்றி தொடக்க நிலைப் பரிசீலனை செய்ததாகவும், குற்றச்சாட்டுகளை நிரூபிக்க சிபிஐ தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை நீதிமன்றம் உரிய முறையில் அணுகவில்லை என்று தெரிவதாகவும் ஒரு செய்தி அறிக்கையில் குறிப்பிட்ட சிபிஐ இது தொடர்பாக சட்ட ரீதியான நடவடிக்கைகளை உரிய காலத்தில் எடுக்கவுள்ளதாகவும், மேல் முறையீடு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
முன்னாள் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் மகளும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி உள்ளிட்டோர் இந்த வழக்கில் இருந்து சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தால் வியாழக்கிழமை விடுவிக்கப்பட்டனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்








