விஷால் தேர்தலில் போட்டி: ''வெற்றிக்காகவா? ஓட்டை பிரிக்கவா?

ஆர்.கே நகர் சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தலில் போட்டியிட நடிகர் விஷால் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில்,'' தனது பலத்தை சோதித்து பாக்க இடைத்தேர்தலை விஷால் பயன்படுத்துகிறாரா?, விஷாலை பின்னணியில் இருந்து யாரோ இயக்குகிறார்கள் என்ற குற்றச்சாட்டு சரியா?'' என பிபிசி தமிழின் சமூக வலைத்தள பக்கத்தில் நேற்றைய வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.
இதற்கு நேயர்கள் பதிவு செய்த கருத்துக்கள் இங்கே..
''இந்தியா ஜனநாயக நாடு. இங்கு குறிப்பிட்ட சிலர்தான் தேர்தலில் நிற்கவேண்டும் என்ற சட்டம் கிடையாது.யார் தேவை என்பதை நிர்ணயிக்கும் பொறுப்பு மக்கள் கைகளில்.'' என குலாம் பதிவிட்டுள்ளார்.

''பொதுவாகவே தென்னிந்திய நடிகர் சங்க பொது செயலாளராக தேர்தெடுக்கப்படுபவர்கள் ரசிகர் மன்றத்தை கட்டமைத்து சேவை செய்து அதன் பிறகே கட்சி ஆரம்பிப்பார். இதன் ஃபார்முலாவை பரிசோதிக்க பார்க்கிறார்'' என சுரேஷ் கூறுகிறார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1

X பதிவின் முடிவு, 2
''சினிமா துறையில் இருந்து இனி அரசியலுக்கு யார் வந்தாலும் தமிழக மக்கள் ஏற்க தயாராக இல்லை.'' என பதிவிட்டுள்ளார் குமார்.
''அதிமுகவின் பலத்தை குறைப்பதற்காக சிலரால் இறக்கப்பட்டவரே விஷால்,வெற்றிக்காக இல்லை ஓட்டுகளை பிரிப்பதற்காக!!''என தனது கருத்தை கூறியுள்ளார் பாஷா.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 3
''வாய்ப்பேச்சும் டிவிட்டரில் கருத்துக்களை மட்டும் கூறும் அவரை விட இவருக்கு தைரியம் அதிகம் தான்.... வாழ்த்துக்கள் விஷாலுக்கு.... ஆனால் ஜெயிக்கலாம் முடியாது'' என்கிறார் சந்திரா.
''நடிகர் சங்க தலைவர் ஆனதில் என்ன செய்தார். தயாரிப்பாளர் சங்க தலைவர் ஆனதில் என்ன செய்தார். ஆர்.கே நகரில் என்ன பிரச்சினை இருக்கு, என்பதாவது விஷாலுக்கு தெரியுமா? சினிமா நடிகர் என்ற ஒன்று மட்டுமே போதுமா? அது மட்டுமல்ல தகுதி.'' என பதிவிட்டுள்ளார் எண்ணுளன் எனும் பெயரில் இருக்கும் நேயர்.
''விஷால் வெற்றி பெற்றாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.'' என்கிறார் விஜயகுமார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்