வங்கதேசம்: விடுதலைக்குப் பின்னும் இந்திரா உதவியது எப்படி?
- எழுதியவர், கமால் ஹுசைன்
- பதவி, வங்கதேச முன்னாள் வெளியுறவு அமைச்சர்
இந்திரா காந்தியின் நூற்றாண்டு இம்மாதம் அனுசரிக்கப்படுகிறது. வங்கதேச விடுதலையில் ஆற்றிய அளப்பரிய பங்கை கூறுவது இப்போது முக்கியமானது.

பட மூலாதாரம், Getty Images
பாகிஸ்தானில் இருந்து பிரிவதற்கான வங்கதேசத்தின் விடுதலையை இந்திரா ஆதரித்து செயல்பட்டபோது அவரது ஆலோசகராக இருந்தவர் பி.என்.ஹக்ஸர்.
பாகிஸ்தானை மறு பிரிவினை செய்து வங்கதேசத்தை உருவாக்குவது, பாகிஸ்தான் செல்ல விரும்பிய வங்காளிகளுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்வது, சொத்துகளை இருநாட்டு அரசுகளுக்கும் பிரிப்பது உள்ளிட்ட சுதந்திரத்துக்குப் பிந்தைய பிரச்னைகளைத் தீர்ப்பதற்காக, 1973-இல் அவர் வங்கதேசத்துக்கான சிறப்புப் பிரதிநிதியாக இந்திராவால் நியமனம் செய்யப்பட்டார்.
ஒரு வெளியுறவுத் துறை அமைச்சராக பி.என்.ஹக்ஸரை சந்திப்பது எனக்கு கிடைத்த நல்வாய்ப்பாக இருந்தது. தீர்க்கப்படாத பல பிரச்சனைகளில் முன்னேற்றம் அடைந்து வந்தது எனக்கு நினைவில் உள்ளது. ஹக்ஸரும் நானும் வங்கதேச பிரிவினை குறித்த விவகாரங்களை விவாதித்து தீர்வுகளை இந்தியாவிடம் முன்வைத்தபோது, அவர் முக்கிய முடிவுகளை எடுத்தார்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள பிரச்சனைகளைத் தீர்ப்பதில் முக்கிய அங்கமாக இருந்தது 1973-இல் இந்தியா மற்றும் வங்கதேசத்தால் வெளியிடப்பட்ட கூட்டுப் பிரகடனம். இது எங்கள் விவாதத்தின்போது தோன்றியது. ஆனால் அதற்கு இந்திரா காந்தியின் ஒப்புதல் தேவைப்பட்டது.
அந்தப் பிரகடனம் வெளியிடப்படும் முன்னதாக வங்கதேசம் தனி நாடாக பாகிஸ்தானால் அங்கீகரிக்கப்படும் வரை பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் இடையே பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறாது என்று இரு வங்கதேசம் நிலைப்பாடு எடுத்திருந்தது. அதனால், அங்கு மனதாபிமான நெருக்கடி நிலவியது.

பட மூலாதாரம், Getty Images
இதனால், வங்கதேசத்தின் கொள்கை நிலைப்பாட்டில் எதுவும் தலையிடாமல் பாகிஸ்தான், வங்கதேச பிரிவினையால் உண்டான மனிதாபிமான நெருக்கடியைத் தீர்க்க கூட்டுப் பிரகடனம் வெளியிடுவது என்று முடிவு செய்யப்பட்டது.
இது மேல்மட்ட அளவிலான ஒப்புதலைப் பெற வேண்டிய விடயம் என்பதால் நானே டெல்லி சென்று, பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த வங்கதேசத்தை தனி நாடாக அங்கீகரிப்பது அவசியம் என்ற வங்கதேச அரசின் கொள்கை முடிவை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று கூட்டுப் பிரகடனம் வெளியிட இந்திரா காந்தியிடமும், பின்னர் வங்கதேச அதிபர் ஷேக் முஜிபுர் ரஹ்மானிடமும் ஒப்புதல் பெற வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
இந்திரா காந்தி அந்த முடிவுக்கு ஒப்புக்கொண்டார். அவர் உத்தரவின்பேரில் இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் நிலையில் மாற்றம் ஏற்பட்டது. 1973-இல் வெளியிடப்பட்ட அந்தக் கூட்டுப் பிரகடனம் மனிதாபிமான நெருக்கடியைத் தீர்ப்பதில் முக்கிய பங்கு வகித்தது. அது சர்வதேச அளவில் வரவேற்கப்பட்டது.
ஜமைக்காவில் 1975-இல் நடைபெற்ற காமன்வெல்த் உச்சி மாநாட்டில், உளவு அமைப்புகள் மூலம் 'வங்கபந்து' ஷேக் முஜிபுர் ரஹ்மான் அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உளவு அமைப்புகள் திரட்டிய தகவல் குறித்த கவலையை இந்திரா அவரிடம் பகிர்ந்துகொண்டார். ஆனால், எந்த வங்காளியும் தனக்கு எதிராக இருக்க மாட்டார் என்று முஜிபுர் ரஹ்மான் உறுதியாக இருந்தார்.

பட மூலாதாரம், KEYSTONE/HULTON ARCHIVE/GETTY IMAGES
ஆனால், இந்திரா கவலைப்பட்ட விடயம் பின்னாளில் உண்மையென நிரூபணம் ஆனது. சில மாதங்களிலேயே ஆகஸ்ட் 15, 1947 அன்று வங்கபந்து படுகொலை செய்யப்பட்டார்.
பின்னர் நான் இந்திராவை சந்தித்தபோது, தான் அவரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக எச்சரித்தது உண்மையாகிப்போனது எவ்வளவு வருத்தத்திற்குரிய விடயம் என்று இந்திரா என்னிடம் கூறினார்.
இந்தப் பிராந்தியத்தின் அமைதி மற்றும் நிலைத்தன்மைக்காக, இந்திரா தனது சொந்தப பாதுகாப்பையும் உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று அப்போது நான் அவரிடம் கூறினேன். வங்கபந்துவைப் போலவே அத்தகைய அச்சுறுத்தலுக்கு இந்திராவும் எவ்விதமான முக்கியத்துவமும் கொடுக்கவில்லை. ஆனால், சில மாதங்களில் அவர் படுகொலை செய்யப்பட்டார்.
அவரை சந்தித்த பொழுது, ஹக்ஸர், தனது ஆலோசகர் பதவியை துறந்த பிறகு, அவரின் சிறந்த ஆலோசனைகளை இழந்துள்ளதாக இந்திரா காந்தி வருத்தம் தெரிவித்தார்.
இன்று, ஹக்ஸரை சந்திக்க உள்ளதையும், இந்திரா காந்தி கூறியது குறித்து அவரிடம் நிச்சயம் தெரிவிப்பேன் என்று கூறினேன்.
இந்திரா காந்தியிடம் அவர் உருவாக்கியுள்ள இந்த உணர்வை விட அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் ஹக்ஸரிடம் கேட்டுக்கொண்டேன்.
நாட்டின் நலனுக்காக, பல நேரங்களில் தன்னிச்சையாக முடிவு எடுக்கும் அவரின் திறனை நான் அவரிடம் பாராட்டியுள்ளேன். குறிப்பாக, சில நேரங்களில் அதிகாரவர்கத்தின் அறிவுரைக்கு மாறாகவும் அவர் முடிவுகள் எடுத்துள்ளார்.
வங்கதேசத்தின் சுதந்திர போராட்ட சூழல்களில், அவரின் இந்த முடிவெடுக்கும் திறன், சில முடிவுகளை எடுக்க செய்தது, அதற்காக அவர் எத்தகைய ஆபத்துகளை ஏற்றுக்கொண்டு இருந்தார் என்பதையெல்லாம் நான் அறிந்திருந்தேன்.
இந்த விஷயம், 1973 கூட்டு பிரகடனத்தின் போது உண்மையானது. அதற்கான பரிந்துரைகளை ஹக்சர் அளித்திருந்தார், அதை நான் இந்திராகாந்தியிடம் கொண்டு சென்றேன். அதுவே பின்னாளில், அவரின் ஒப்புதலோடு 1973 கூட்டு பிரகடனம் ஆனது.
இது போன்ற முக்கிய சம்பவங்கள், வங்க தேசத்தின் விடுதலை மற்றும் அதன் சுதந்திரத்தின் ஒருங்கிணைப்பு ஆகியவற்றில், இந்திரா காந்தியின் பங்களிப்பு எத்தகைய முக்கியமானது என்பதை விளக்கும் என்று நான் நம்புகிறேன்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












