மிகை பணி கலாசாரம் - ஜப்பான் நிறுவனத்துக்கு சிக்கல்
பணியாளர்களை அளவுக்கு அதிகமாக மிகைநேரப்பணியில் ஈடுபடுத்தியதால் டெண்ட்சு என்ற ஜப்பானிய விளம்பர நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் இத்தகைய வழக்கம் பரவி வரும் நிலையில் அதனை கட்டுபடுத்தும் விதமாக இந்நடவடிக்கை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பட மூலாதாரம், AFP
தொழிலாளர் சட்ட விதிகளை மீறியதற்காக டோக்யோ நீதிமன்றம் அந்நிறுவனத்திற்கு 4,400 அமெரிக்க டாலர்களை அபராதமாக விதித்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
கடந்த 2015ஆம் ஆண்டு மத்சுரி டகாஹஷி என்ற இளம் பணியாளர் தற்கொலை செய்து கொண்டதற்கு பின் ஜப்பானின் மி்கைப்பணி கலாசாரம் தொடர்ந்து கவனிக்கப்பட்டுவருகிறது.
வேலைப்பளுவினால் உயிரிழப்பது என்பது ஜப்பானின் நீண்ட கால பிரச்சனையாக இருந்து வருகிறது. மேலும் இப்பிரச்சனை கரோஷி என்ற ஜப்பானிய வார்த்தையால் குறிக்கப்படுகிறது.
டகாஹஷி தற்கொலை செய்துகொள்வதற்கு முந்தைய ஒரு மாதத்தில் வேலை நேரத்தை தாண்டி 100 மணி நேரம் மிகை நேர வேலை பார்த்துள்ளார் என்றும் அதிக வேலை பளு அவர் தற்கொலை செய்து கொள்ள வழி செய்தது என்றும் அதிகாரிகள் தெரிவித்தன்ர்.
உயர்மட்ட அளவிலான புதுப்பித்தல் என்ற கொள்கை நாட்டின் படுபயங்கரமான நீண்ட வேலைநேரம் மற்றும் ஊதியமில்லா மிகை நேர பணிக்கு வழிவகுத்தது.

பட மூலாதாரம், AFP
ஜப்பானின் மிகைப்பணி பிரச்சனை என்பது நீண்ட காலமாக தொடரும் ஒன்று என ஒசகா பல்கலைக்கழகத்தின் மானுடவியல் பேராசிரியர் ஸ்காட் நார்த் தெரிவித்தார்.
நாட்டின் மிகப்பெரிய விளம்பர நிறுவனங்களுள் ஒன்றான டென்சுவுக்கு விதிக்கப்பட்டுள்ள இந்த அபாரதமானது இவ்விவகாரத்தில் எவ்வித தடையையும் ஏற்படுத்தாது எனவும் அவர் தெரிவித்தார்.
கடந்த 2013ஆம் ஆண்டு பத்திரிக்கையாளர் மிவா சடோவின் மரணம் அதிக வேலை பளுவால் ஏற்பட்டது என அதிகாரிகள் உற்படுத்தியுள்ளதாக NHK என்ற செய்தி நிறுவனம் கடந்த வாரம் தெரிவித்தால் இப்பிரச்சனை மீண்டும் வெடிக்க தொடங்கியுள்ளது. 31 வயதான மிவா இதயம் செயலிழந்ததால் உயிரிழந்தார்.
மிவா உயிரிழந்து ஒரு வருடத்திற்குப்பின் அரசியல் பத்திக்கையாளார்கள் ஒரு மாதத்திற்கு 159 மணி நேரம் மிகை பணியில் ஈடுபடுத்தப்படுவதாகவும் மிவாவுக்கு மாதத்தில் 2 நாட்கள் மட்டுமே விடுப்பு கொடுக்கப்பட்டதாகவும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
4 வருடங்களான நிலையிலும் தங்களது மகளின் மறைவை தங்களால் நம்ப முடியவில்லை என்று மிவாவின் பெற்றோர் தெரிவித்தனர்.
நூற்றுக்கும் மேற்ப்பட்டவர்கள் கரோஷியால் மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் தற்கொலை போன்றவற்றால் உரிழப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. உண்மையில் அந்த எண்ணிக்கை அதிகம் என பிரச்சாரகர்கள் தெரிவிக்கின்றனர்.
பிற செய்திகள்
- பாலியல் தொந்தரவு செய்பவர்களோடு செல்ஃபி எடுக்கும் கல்லூரி மாணவி
- புதிய தேர்தல் சட்டம்: பாகிஸ்தானில் வெடிக்கும் சர்ச்சை
- ''சின்னம்மா ரிட்டர்ன்ஸ்'': ட்விட்டரில் கலக்கும் 'சசிகலா' மீம்கள்
- பாகிஸ்தானில் இந்துக்கள் ஏன் சீக்கிய மதத்திற்கு மாறுகிறார்கள்?
- கத்தாரில் 2022இல் உலக கோப்பை கால்பந்து போட்டி நடக்குமா?
- பொருளாதார மந்த நிலையிலும் இந்திய செல்வந்தர்களிடம் செல்வம் குவிவது எப்படி?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- ட்விட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













