You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நடிகையை அழ வைத்ததால் சமூக வலைத்தளங்களில் வதைபடும் டி.ராஜேந்தர்
சமீபத்தில் நடைபெற்ற 'விழித்திரு' திரைப்படக் குழுவினரின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய இயக்குநரும் நடிகருமான டி.ராஜேந்தர் தனக்கு முன்பு பேசிய நடிகை சாய் தன்ஷிகா திரைபடத்தில் பணியாற்றியவர்களுக்கு நன்றி தெரிவிக்கும்போது தனது பெயரையும் கூறாமல் தவற விட்டதற்காக அவருக்கு மேடை நாகரிகம் தெரியவில்லை என்று கடுமையாக விமர்சித்தார்.
தெரியாமல்தான் அவர் பெயர் விடுபட்டுபோனதாகவும், அவமதிக்கும் உள்நோக்கம் எதுவும் இல்லை என்றும் கூறி ராஜேந்தரின் காலைத் தொட்டு மன்னிப்புக் கேட்க தன்ஷிகா முயன்றபோதும், 'நீ கட்டி வரல சேரி, இப்போ சொல்ற சாரி' என்று கூறி அவமதித்தார்.
அவரின் பேச்சால் அந்த மேடையிலேயே தன்ஷிகா அழுதுவிட்டார்.
அதன் பின்னர் படத்தின் விளம்பரத்திற்காக தான் அவ்வாறு பேசியதாக ராஜேந்தர் கூறியிருந்தாலும் அவரின் பேச்சும், அப்போது மேடையில் எதிர்வினையாற்றாமல் சிரித்துக்கொண்டிருந்த அப்படக்குழுவினரின் செயலும் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.
"முதலில் விளையாட்டாக ஆரம்பித்தது, பின்னர் தீவிரமானது. தன்ஷிகா துறைக்குப் புதியவர், அவரை மூத்தவர்கள்தான் வழிநடத்த வேண்டும். இது தொடர்பாக மேற்கொண்டு யாரும் கோபம் கொள்ள வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்," என்று அப்படத்தில் நடித்துள்ள வெங்கட் பிரபு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஆனால், அப்படத்தின் நாயகன் கிருஷ்ணா தனது அமைதியைத் தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம் என்றும், ராஜேந்தர் தொடர்ந்து தன்ஷிகாவை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டது ஏற்றுக்கொள்ளவும் நியாயப்படுத்தவும் முடியாதது என்று பதிவிட்டுள்ளார்.
நடிகர் சங்க பொது செயலாளர் விஷாலும் டி.ராஜேந்தரைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதனிடையே, 'பிக் பாஸ்' நிகழ்ச்சியின்போது நடிகை ஓவியாவுக்கு ஆதரவாக 'ஓவியா ஆர்மி' என்று சமூக வலைதளவாசிகள் உருவாக்கியதைப்போல, 'தன்ஷிகா ஆர்மி' என்ற ஹேஷ் டேக் ஒன்றை உருவாக்கி அவருக்கு ஆதரவு தெரிவிப்பதுடன் மட்டுமல்லாமல் ராஜேந்தரை விமர்சித்தும், கேலி செய்தும் பல பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
எதற்கெடுத்தாலும் 'ஆர்மி' ஆரம்பிப்பவர்களை பகடி செய்யும் பதிவு
'தவளை தன் வாயால் கெடும்'
5 கோடிக்கு எத்தனை சைபர்?
குறைகுடம் கூத்தாடும்...
ராஜேந்தரின் சபை நாகரிகம்
சிம்புவும் விமர்சனத்தில் இருந்து தப்பவில்லை
இதனிடையே தனக்கு ஆதரவு தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள சாய் தன்ஷிகா, தனியாக ஒரு பெண் இருந்தால் அவரின் நிலை இதுதான் என்று ட்விட்டரில் பதிந்துள்ளார்.
பிற செய்திகள்:
- தன்னைத் தானே திருமணம் செய்து கொண்ட இத்தாலிப் பெண்
- இந்தியன் 2 - மீண்டும் இணையும் கமல், ஷங்கர் கூட்டணி
- இலங்கையில் ஒற்றையாட்சி முறை மாறாது, புத்த மத முக்கியத்துவம் குறையாது: சிறிசேன
- ஆஸ்திரேலியா: புற்றுநோய் இருப்பதாக கதைவிட்ட வலைப்பதிவருக்கு அபராதம்
- அமெரிக்க சுகாதாரச் செயலாளர் பதவி விலகல்: தனி விமான விவகாரம்
- மரிலின் மன்றோ கல்லறை அருகே 'உறங்க' போகும் உல்லாச பத்திரிகை அதிபர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :