குர்மீத் ராம் ரஹீமின் தண்டனைக்கு காரணமான 7 பேர் யார்?

குர்மீத் ராம் ரஹீமின் தண்டனைக்குக் காரணமான 7 பேர்

பட மூலாதாரம், Saintdrmsginsan.me

15 ஆண்டுகளாக நடைபெற்ற பாலியல் வல்லுறவு வழக்கில் ஹரியானா சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

ஆனால், அரசியல் செல்வாக்கும், பின்புலமும் கொண்ட குர்மீத் ராம் ரஹீம் சிங் மீதான குற்றங்களை நிரூபிப்பது மிகவும் கடினமாகவே இருந்தது.

தங்கள் உயிரை பயணம் வைத்து அநியாயத்திற்கு எதிராக யுத்தம் நடத்திய இரு பெண்கள் முதல் விசாரணை நடத்திய அதிகாரிகள் வரை பலரின் பங்களிப்பே ராம் ரஹீமுக்கு தண்டனை பெற்றுத் தந்தது.

அதில் முக்கியமான ஏழு பேர் பற்றி தெரிந்து கொள்வோம்.

1 - உயிரை துச்சமென கருதிய இரண்டு பெண் சிஷ்யைகள்

இந்த விவகாரத்தில், குர்மீத் ராம் ரஹீமிடம் சிஷ்யைகளாக இருந்த இருவர் அப்போதைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயிக்கு அநாமதேயக் கடிதம் அனுப்பினார்கள். அதில் தங்களுக்கு நடந்த அநியாயம் பற்றி அவர்கள் விரிவாக குறிப்பிட்டிருந்தார்கள்.

குர்மீத் ராம் ரஹீமின் தண்டனைக்குக் காரணமான 7 பேர்

பட மூலாதாரம், NARENDER KAUSHIK

படக்குறிப்பு, சிர்சாவின் உள்ளூர் பத்திரிகையாளர் ராம்சந்த்ர சத்ரபதி ராம் ரஹீமுக்கு எதிராக செய்தி வெளியிட்டார்

2 - சிஷ்யையின் சகோதரர் கொல்லப்பட்டார்

அநாமதேயக் கடிதம் அனுப்பியது அவர்களில் ஒருவரின் சகோதரர் ரஞ்சித் சிங்காக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. அதன்பிறகு இரண்டு மாதங்களில் தேரா சச்சா ஆதரவாளர்களால் அவர் கொல்லப்பட்டார்.

3 - பத்திரிகையாளர் சத்ரபதி

2002இல் பத்திரிகையாளர் ராம்சந்த்ர சத்ரபதி, குர்மீத் ராம் ரஹீம் சிங் பாலியல் வல்லுறவு செய்தது தொடர்பான செய்தியை வெளியிட்டார். தன்னிடம் சிஷ்யைகளாக இருந்த இரு பெண்களிடம் தவறாக நடந்து கொண்டது தொடர்பான செய்திகளை வெளியிட்ட சில மாதங்களுக்கு பிறகு சத்ரபதி துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்தார்.

குர்மீத் ராம் ரஹீமின் தண்டனைக்குக் காரணமான 7 பேர்

பட மூலாதாரம், Twitter/Neeraj Ghyawan

படக்குறிப்பு, பத்திரிகையாளர் ராம்சந்த்ர சத்ரபதி

4 - விசாரணை அதிகாரி சதீஷ் டாகர், முலிஞ்சோ நாராயணன்

குர்மீத் சிங் மீதான வழக்கை பல ஆண்டுகளாக சிபிஐ விசாரித்து வந்த்து. விசாரணை நடைபெற்ற காலகட்டத்தில் உயரதிகாரிகள் முதல் அரசியல் தலைவர்கள்வரை பல இடங்களில் இருந்து விசாரணை அதிகாரிகளுக்கு அழுத்தங்கள் வந்தது.

ஆனால், விசாரணை அதிகாரி சதீஷ் டாகர் மற்றும் முலிஞ்சோ நாராயணன் எந்தவித அழுத்தத்திற்கும் அடிபணியாமல் விசாரணையை நடத்தினார்கள்.

5 - சிபிஐ ஜக்தீப் சிங்

நேர்மையானவர் மற்றும் கண்டிப்பானவர் என்று அறியப்பட்ட சிபிஐ நீதிபதி ஜக்தீப் சிங், குற்றம்சாட்டப்பட்ட குர்மீத் ராம் ரஹீம் வழக்கில் அவர் குற்றவாளி என்று அறிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :