பாலியல் வல்லுறவிற்கு ஆளான பத்து வயது சிறுமியின் கருக்கலைப்பிற்கு அனுமதி மறுப்பு

பட மூலாதாரம், UNK
பாலியல் வல்லுறவிற்கு ஆளான பத்து வயது சிறுமி, கருக்கலைப்பு செய்ய இந்திய நீதிமன்றம் ஒன்றுஅனுமதி மறுத்துள்ளது.
தனது உறவினரால் பாலியல் வல்லுறவிற்கு ஆளானதாகக் கூறப்படும் அச்சிறுமி, ஆறு மாதம் கருவுற்றிருப்பதாகத் தெரிகிறது.
இந்த நிலையில் கருக்கலைப்பு செய்வது, அந்த சிறுமியின் உயிருக்கு ஆபத்தாக முடியலாம் என மருத்துவர்கள், பஞ்சாப் மாநிலம் சண்டிகாரில் உள்ள நீதிமன்றத்திற்கு பரிந்துரைத்துள்ளனர்.
ஆனால் குழந்தையை சுமப்பதால் சிறுமியின் உடல் நலத்திற்கு ஏற்படும் பாதிப்பு குறித்தும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
மே மாதம் ஹரியானாவில் உள்ள நீதிமன்றம் ஒன்று இம்மாதிரியான வழக்கு ஒன்றில், வளர்ப்புத் தந்தையால் பாலியல் வல்லுறவிற்கு ஆளானதாகக் கூறப்பட்ட, ஐந்து மாதம் கருவுற்றிருந்த , பத்து வயது சிறுமி கருக்கலைப்பு செய்து கொள்ளலாம் என தீர்ப்பளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பிபிசியின் பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
- டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்








