'இந்தியா ராணுவத்தை திரும்ப பெறாவிட்டால் அவமானப்பட வேண்டியிருக்கும்'

பட மூலாதாரம், Getty Images
இமயமலைப் பகுதியில் சர்ச்சைக்குரிய பகுதியில் இருந்து ராணுவத்தை திரும்பப் பெறாவிட்டால், இந்தியா அவமானப்பட வேண்டியிருக்கும் என்று சீன அரசு ஊடகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சீனா, இந்தியா மற்றும் பூடானின் எல்லைப்பகுதியில் உள்ள டோக்லாம் என்ற இடத்தில் இருந்து இந்தியா தனது படைகளை திரும்ப அழைத்துக் கொள்ளும்வரை பேச்சுவார்த்தைகளுக்கு இடமில்லை என்று சீன அரசின் தேசிய ஊடகமான சின்குவா கூறுகிறது.

பட மூலாதாரம், Getty Images
சீனாவும், பூடானும் உரிமை கொண்டாடும் அந்தப் பகுதியில் கடந்த மாதம் புதிய சாலை கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதால், இந்தியா அங்கு தனது படைகளை அனுப்பியதாக இந்தியத் தரப்பு தெரிவிக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
இந்தப் பகுதியானது, இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான சிக்கிம் மற்றும் அண்டை நாடான பூடானின் எல்லையில் அமைந்துள்ளது. இந்த பகுதியை சீனாவும், பூடானும் உரிமை கொண்டாடும் நிலையில், இந்தியா பூடானுக்கு ஆதரவு தெரிவிக்கிறது.

பட மூலாதாரம், AFP
1967 ஆம் ஆண்டு சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையேயான மோதலிலும் இந்தப் பகுதி முக்கியப் பங்கு வகித்தது. இரு நாடுகளுக்கும் இடையில் தற்போது நிலவும் பதற்றம் முன்னெப்போதும் இல்லாத அளவு உச்சத்தை அடைந்திருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
பிற செய்திகள்
- தமிழக விவசாயிகளின் நூதனப் போராட்டம் மீண்டும் தொடங்கியது
- நேப்கின்னுக்கு ஜி.எஸ்.டி வரி: பெண்கள் சுகாதாரம் பாதிக்கப்படும் என குற்றச்சாட்டு
- மாதவிடாய் காலத்தில் பெண் ஊழியர்களுக்கு விடுமுறை சாத்தியமா?
- உங்கள் புகைப்படங்கள்: `என் வீட்டு வாசலில்`..!
- காபி குடிப்பதால் நீண்ட காலம் வாழ முடியுமா?
- இதுவரை அறிந்திராத சிறிய நட்சத்திரத்தை கண்டுபிடித்துள்ள வானியலார்கள்
- சாம்பியன் பெடரரின் சாதனைப் பயணம் (புகைப்படத் தொகுப்பு)
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
- டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












