உங்கள் புகைப்படங்கள்: `என் வீட்டு வாசலில்`..!

வாரந்தோறும் நமது வாசகர்கள் எடுத்த புகைப்படங்களை ஒரு குறிப்பிட்ட தலைப்பின் கீழ் பதிவிட்டு வருகிறோம். அந்த வரிசையில் இந்த வார புகைப்படத் தொகுப்பின் தலைப்பு ` என் வீட்டு வாசலில்`.

வேல்ஸ் பகுதியில் கார்களை சூழ்ந்திருக்கும் ஆட்டுக் கூட்டம்.

பட மூலாதாரம், Izzy Nagle

படக்குறிப்பு, இஸ்ஸி நக்லி: ஆட்டு மந்தையை கடக்கும் போது ஏற்பட்ட சிறிய விபத்து. இந்த தருணத்தை புகைப்படம் எடுக்க நான் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்.கார்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.
வாசற்படியில் நிற்கும் நியூட்ஸ்

பட மூலாதாரம், Sjoerd Wadman

படக்குறிப்பு, ஜோர்டு வாட்மென்: `என் வீட்டில் வாழும் அல்பைன் நியூட்ஸ் உயிரினம். வீட்டின் வாசலிலிருந்து வெளியே எட்டிப் பார்க்கிறது.`
அயர்லாந்தின் உள்ள ஒரு வீட்டின் வாசலில்

பட மூலாதாரம், Toby Demeuldre

படக்குறிப்பு, டோபி டெமுல்டெர்: வெல்கம் என்ற செய்தியை சொல்லும் விரிப்பின் மீது செடிகள் வளரத் தொடங்கிவிட்டன. இதை பார்க்கும் போது `நீ வருவதற்கு முன்னரே நான் வந்துவிடுவேன்` என சொல்வது போல இருக்கிறது.
இரண்டு சிவப்பு நிறக் கார்கள்

பட மூலாதாரம், Corinna Del Debbio

படக்குறிப்பு, கோரின்னா செல் டெபிபோ: எடின்பர்க்கில் உள்ள எனது வீட்டின் வாசலில் இருந்து இந்த புகைப்படத்தை எடுத்தேன். இந்த கார்கள் எனது பக்கத்து வீட்டில் வசிக்கும் தந்தை மற்றும் மகனுடையது. அற்புதமான பார்க்கிங் திறனுடன் நிறுத்தப்பட்டிருந்தது. இது நகர குடும்ப வாழ்க்கையை எடுத்துக் கூறும் ஒரு சிறந்த புகைப்படம்.
சவுத் கரோலினாவில் உள்ள கொலம்பியா பகுதியில் அமைந்துள்ள ஒரு சிற்பம்

பட மூலாதாரம், Tracy Jones

படக்குறிப்பு, ட்ரேசி ஜோன்ஸ்: `கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பு கன்சாஸ் நகருக்கு பயணம் செய்த போது , சிற்பக் கல்லூரி மாணவர்களுக்கான பொருட்காட்சிக்கு சென்றேன். என்னை அங்கிருந்த இளம் கலைஞர் ஒருவர் சிலையாக வடித்தார். மேலும் இந்த சிற்பத்தை பல மணி நேரம் பயணித்து வந்து என்னிடம் ஒப்படைத்தார்.`
சார்ட்டர் ஹவுசில் உள்ள கிரேட் ரூம்

பட மூலாதாரம், Rakesh Mathur

படக்குறிப்பு, ராகேஷ் மாத்தூர்: `இடைக்கால இசை மூலம் வரலாற்றை நினைவுபடுத்துதல்.`
பிரிஸ்டலில் உள்ள வீடுகளை பிரதிபலிக்கும் கார்களின் மேற்கூரைகள்

பட மூலாதாரம், Cathryn Gallacher

படக்குறிப்பு, கேத்ரீன் கேலச்சர்: `பிரிஸ்டல் நகரின் கிங்ஸ்டவுன் பகுதியில் உள்ள எனது வீட்டின் வாசலுக்கு வெளியே பல கார்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அந்த கார்கள் இல்லாமலும் இந்த தெரு அழகாக காட்சியளிக்கும் என்றாலும், மழைக்கால மாலை நேரம் ஒன்றில், அவற்றின் மேற்கூரைகள் சில கவர்ந்திழுக்கும் பிரதிபலிப்புகளை தருகின்றன.`
இலைகள்

பட மூலாதாரம், Matt Berrisford

படக்குறிப்பு, மட் பெரிஸ்ஃபோர்டு:` கடந்த ஆண்டின் இலையுதிர்காலத்தில் எனது வீட்டின் வாசலில் கிடந்த இலைகளில் கலவை.`
கோழிகள்

பட மூலாதாரம், Derrick

படக்குறிப்பு, இறுதியாக தெற்கு ஜகார்த்தாவில் உள்ள டெர்ரிக்கின் மூன்று கோழிகளான பா ப்ரூன்,பெட்டி மற்றும் ஹோரஸ் குறித்த புகைப்படம்.