நடிகை மீது பாலியல் தாக்குதல்: மலையாள நடிகர் திலீப் கைது

காரில் பயணம் செய்து கொண்டிருந்த தென்னிந்திய நடிகை ஒருவர் கொச்சியில் கடத்தப்பட்டு பாலியல் தாக்குதலுக்கு ஆளானதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான வழக்கில், பிரபல மலையாள நடிகர் திலீப்பை இன்று திங்கள்கிழமை கேரளா மாநில காவல்துறை கைது செய்துள்ளது.
இதே வழக்கு தொடர்பாக கடந்த வாரம் நடிகர்கள் திலீப் மற்றும் நாதிர்ஷா ஆகியோரிடம் கேரளா காவல்துறை விசாரணை மேற்கொண்டது.
அந்த சமயத்திலேயே, நடிகர் திலீப் கைது செய்யப்படலாம் என ஊடககங்களில் யூகங்கள் வெளியாகியிருந்த சூழலில், இன்று காலை நடிகர் திலீப்பை விசாரணைக்கு அழைத்து வந்த கேரளா காவல்துறை, பின்னர் மாலையில் கைது செய்துள்ளதை உறுதி செய்தது.

இந்த வழக்கின் முக்கிய சந்தேக நபரான சுனில் அளித்திருந்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே இந்த கைது சம்பவம் நடைபெற்றிருக்க கூடும் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதற்கு முன்னதாக கைது செய்யப்பட்டவர்களில், நடிகையின் கார் ஓட்டுநர் மார்ட்டின், கோயம்புத்தூரைச் சேர்ந்த வாடிவால் சலீம் மற்றும் பிரதீப் ஆகியோரும் அடங்குவர்.
தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த வழக்கு தொடர்பான விசாரணையில், இன்னமும் கூட கைதுகள் இருக்கக்கூடும் என கேரளா காவல்துறை தெரிவிக்கின்றது.

இவ்வழக்கில் போலீசார், பாலியல் வல்லுறவு, ஆட்கடத்தல், கிரிமினல் சதி, தவறாக தடுத்துவைப்பது போன்ற இ.பி.கோ சட்டப் பிரிவுகளின் கீழும், தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழும் வழக்குகளை பதிந்துள்ளனர்.
கைதாகியுள்ள முக்கிய சந்தேக நபரான சுனில் மீது பல்வேறு கிரிமினல் வழக்குகள் இருக்கின்றன.
தொடர்புடைய செய்திகள்
கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற இந்த சம்பவத்திற்கு, கேரள திரையுலகின் பல்வேறு நட்சத்திரங்கள் தொடர்ந்து தங்கள் கண்டனங்களைப் பதிந்திருக்கின்றனர்.
நடிகை மீது பாலியல் தாக்குதல் கேரள முதல்வருக்கு நடிகர் சங்கம் கடிதம்
பிற செய்திகள்
- பாலியல் தாக்குதல் நடத்திய கான்ஸ்டபிளை அடையாளம் காட்டினார் ரோஹிஞ்சா முஸ்லிம் பெண்
- அமெரிக்க கொடியின் மீது சிறுநீர் கழித்த பெண்ணுக்கு மிரட்டல்
- ''திருமண நாளில் கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டேன்''
- கருத்தடைக்கு முயன்றால் பெண்களை பணி நீக்கம் செய்ய சட்டம் இயற்றும் அமெரிக்க மாநிலம்
- "மாட்டுக்கு மரியாதை, மகளிருக்கு பாதுகாப்புகூட இல்லை"
- ஆபத்துக்கு அழைப்புவிடும் வாய்வழி பாலுறவு
பெங்களூருவில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
- டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்














