தமிழகத்தில் 10. பிளஸ் 2 வகுப்புகளுக்கு ரேங்க் முறை ரத்து
தமிழ்நாட்டில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும்போது மாநில அளவில் பல்வேறு பிரிவுகளில் "ரேங்க்" வெளியிடும் முறையை ரத்து செய்வதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

பட மூலாதாரம், DIPR
அதன்படி, பனிரெண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகும்போது இனி மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்கள், ஒவ்வொரு பாடத்திலும் முதலிடங்களைப் பிடித்தவர்கள் பெயர்கள் வெளியிடப்படமாட்டாது.
இம்மாதிரி ரேங்க் வெளியிடப்படுவதால் மாணவர்கள், அவர்களது பெற்றோருக்கு ஏற்படும் மன அழுத்ததை நீக்குவதற்காகவே இந்த முடிவு என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று அறிவித்தார்.
ஒரு மதிப்பெண் குறைந்ததால் முதலிடங்களைத் தவறவிடும் மாணவர்கள் பெரும் அழுத்தத்திற்கு ஆளாவதாகவும் செங்கோட்டையன் தெரிவித்தார்.
மேலும் 11ஆம் வகுப்புக்கும் பொதுத் தேர்வு நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டுவருவதாகவும் இது தொடர்பான விளக்கங்கள் முதல்வரிடம் அளிக்கப்பட்டிருப்பதாகவும் செங்கோட்டையன் தெரிவித்தார்.
தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு கூடுதல் சலுகைகளும் உதவித் தொகைகளும் அளிக்கப்படுமென்றும் அரசு அறிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் 12ஆம் வகுப்புத் தேர்வுக்கான முடிவுகள் வெளியாகவிருக்கும் நிலையில் கல்வியமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளன.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












