சமூகம்: ‘தேசிய பாதுகாப்புக் கொள்கையில் மோதியை விட இந்திரா சிறந்தவரா?’
இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீர் பிராந்தியத்தில், இரண்டு இந்திய சிப்பாய்களின் சிதைக்கப்பட்ட உடல்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, பாகிஸ்தான் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்ற அழுத்தம் இந்திய அரசுக்கு அதிகரிக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
பிரதமர்களிலேயே மிகவும் பலவீனமானவர் நரேந்திர மோதி என்ற கருத்து, செவ்வாய்க்கிழமை காலை முதலே, '#ModiWeakestPMever' டிவிட்டரில் அதிக அளவில் பரவலாகி வருகிறது.
சமூக ஊடகங்களில் இந்த ஹேஷ்டேகை பயன்படுத்தி, ராணுவ வீரர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக கோபத்தை வெளிக்காட்டுகிறார்கள்.
சிம்மி அஹூஜா எழுதுகிறார், 'பிரதமரே, துரதிருஷ்டவசமாக, நீங்கள் தான் இதுவரை பதவியில் இருந்தவர்களில் மிகவும் பலவீனமானவர்'.

பட மூலாதாரம், Simmi Ahuja Twitter
முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியுடன் மோதியை ஒப்பிடும் சுனில் பாரூபல், 'நாட்டை மேம்படுத்துவதற்காக மோதி சிறப்பான திட்டங்களை வகுத்தாலும், தேசிய பாதுகாப்புக் கொள்கைகள் வகுப்பதில் இந்திராகாந்தி சிறந்தவர்` என்று கூறியிருக்கிறார்.
ஷிவம் எழுதுகிறார், 'பிரதமர் ஆகாயத்தில் கோட்டைகள் கட்டுகிறார், மோதி ஒரு பலவீனமான பிரதமர், நாட்டுக்கு அவர் மிகப்பெரிய அவமானம்'என்று.

பட மூலாதாரம், Shivam Twitter
இதனிடையே துல்லியமான தாக்குதல் (சர்ஜிகல் ஸ்ட்ரைக்) குறித்த கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன. சிலர் துல்லியமான தாக்குதல் நடவடிக்கை எடுக்கலாம் என்று ஆலோசனை கூறுகின்றனர்.
அன்ஷுமான் டாண்டா எழுதுகிறார், 'எங்கள் வீரர்களின் உடலை சிதைத்திருக்கிறார்கள், ஆனால், துல்லியமாக தாக்கலாமா வேண்டாமா என்று நாம் யோசித்துக் கொண்டிருக்கிறோம். வெற்று யோசனையால் எதுவும் நடக்காது".
இதைத்தவிர, பிரதமர் மற்றும் பாரதீய ஜனதா கட்சித் தலைவர்களின் அறிக்கைகளும், கருத்துக்களும் பகிரப்படுகின்றன. அதில் ராணுவ வீர்ர்கள் மீது நடத்தப்பட்ட கொடுமை குறித்து மத்திய அரசின் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.
இந்த செய்திகளையும் நீங்கள் படிக்கலாம்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












