கூவத்தூர் நட்சத்திர விடுதிக்கு சென்றடைந்தார் சசிகலா

தனக்கு ஆதரவாக உள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை சந்தித்து ஆலோசனை நடத்த, அக்கட்சியின் பொதுச் செயலர் சசிகலா, உறுப்பினர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள கூவத்தூர் நட்சத்திர விடுதிக்கு சென்றடைந்தார்.

காரில் ஏறும் சசிகலா

பட மூலாதாரம், Getty Images

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களோடு ஆளுநர் வித்யாசாகர் ராவை இன்று சந்திக்க அனுமதி கேட்டுள்ள நிலையில் இந்த சந்திப்பை நடத்துகிறார் சசிகலா.

விடுதிக்கு புறப்படுவதற்கு முன்னதாக, ஜெயலலிதாவின் நினைவிடத்தில் சசிகலா அஞ்சலி செலுத்தினார். பின்னர் கூவத்தூர் புறப்பட்டுச் சென்றார்.

சென்னை ஹோட்டல்களில் தங்கியிருப்போர் கணக்கெடுப்பு

இலச்சினை

இதனிடையே, சென்னை ஹோட்டல்களில் தங்கியிருப்போர், வெளியூர்களில் இருந்து வந்திருப்போர் அனைவரையும் கணக்கெடுத்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை காவல்துறை ஆணையர் ஜார்ஜ் ஆணையிட்டுள்ளார்.

இன்று தமிழக ஆளுநர் ஆட்சி அமைப்பது குறித்து கருத்து எதுவும் கூறாதபட்சத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்போம் என்று அதிமுக பொது செயலாளர் தெரிவித்துள்ள நிலையில், கட்சியினரால் அசம்பாவிதங்கள் ஏற்படலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

எனவே, காவல்துறையினர் சனிக்கிழமை மாலை 6 மணிக்குள், சென்னை ஹோட்டல்களில் தங்கியுள்ளோர் விவரம் குறித்து அறிக்கை அளிக்க ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்