நாங்கள் யாரும் கடத்தப்படவில்லை.: எம்.எல்.ஏ.க்கள் பிபிசி தமிழுக்கு பேட்டி
காணொளியை காண : நாங்கள் கடத்தப்படவில்லை : எம்.எல்.ஏக்களுடன் பேஸ்புக் நேரலை

பட மூலாதாரம், FACEBOOK
''என்றைக்கும் சின்னம்மாதான்''
''இரட்டை சின்னம் எங்கு உள்ளதோ அங்குதான் நாங்கள் இருப்போம். பொதுச் செயலாளராக சின்னம்மாவை தேர்வு செய்தது இதே ஓ.பி.எஸ் தான். அவர் அன்றே இதை செய்திருக்க வேண்டும். நாங்கள் சுதந்திரமாக தான் இருக்கிறோம். டி.வி பார்க்கிறோம் மற்ற உறுப்பினர்களுடன் பேசி வருகிறோம். ஆளுநர் அழைக்கும் போது கூட்டாக செல்ல வேண்டும் என்பதற்காக தான் விடுதியில் தங்கியிருக்கிறோம்'' என்றார் திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் கருத்து தெரிவித்தார்.
''சுதந்திரமாக இருக்கிறோம்''
''விடுதியில் 130 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். நாங்கள் சுதந்திரமாகத்தான் இருக்கிறோம் யாரும் எங்களை அடைத்து வைக்கவில்லை'' என்று பல்லடம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நட்ராஜன் கருத்து தெரிவித்தார்.
''ஆட்கொணர்வு மனுக்களை யாரோ போடுகிறார்கள்''
''நாங்கள் இங்கு சுதந்திரமாகத்தான் இருக்கிறோம். நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுக்கள் யார் யாரோ போடுகிறார்கள்'' என்றார் திருப்பூர் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் கருத்து தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்













