மீண்டும் தர்மமே வெல்லும்: ஆளுநரை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைத் தொடர்ந்து பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை, அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய ஆதரவாளர்களுடன் சந்தித்துள்ளார்.

பட மூலாதாரம், STRINGER
ஆளுநரின் சந்திப்பைத் தொடர்ந்து, தனது வீட்டில் செய்தியாளர்களிடம் பேசிய பன்னீர் செல்வம், அ.தி.மு.கவில் தற்போதுள்ள சூழலை ஆளுநரிடம் விவாதித்தாகவும், ஆளுநர் அனைத்து விஷயங்களையும் கேட்டறிந்ததாகவும் கூறினார்.
பின்னர், இந்த விவகாரத்தில் உறுதியாக நல்லது நடக்கும் என்றும், தர்மம் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும் என்றும் கூறியுள்ளார்.
தமிழகத்தில் ஆளும் கட்சியான அ.தி.மு.கவில் சசிகலா அணி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணி எனப் பிரிந்துள்ள நெருக்கடியான அரசியல் சூழலில், தமிழகத்தின் பொறுப்பு ஆளுநரான வித்யாசாகர் ராவ் பிற்பகல் 3.30 மணிக்கு சென்னை வந்தடைந்தார்.
தற்போது தமிழகத்தில் பரபரப்பான சூழல் நிலவுவதால் ஆளுநருக்கு சென்னை விமான நிலையத்திலிருந்து ஆளுநர் மாளிகை வரை சாலையோரம் கடும் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
முதல்வர் ஓ .பன்னீர்செல்வத்துக்கு மாலை 5 மணிக்கும், வி. கே. சசிகலாவிற்கு இரவு 7.30 மணிக்கும் நேரில் சந்திக்க நேரம் ஒதுக்கித்தந்தார் ஆளுநர் வித்யாசாகர் ராவ்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












