அதிமுகவை உடைக்க வேண்டிய தேவை பாஜகவிற்கு இல்லை : பொன் ராதாகிருஷ்ணன்
அதிமுகவை உடைக்க வேண்டிய தேவை பாஜகவிற்கு இல்லை என பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், ADMK
சில நாட்களுக்கு முன், அதிமுக பொது செயலாளர் சசிகலாவின் கணவர் நடராஜன், அதிமுகவில் பிளவு ஏற்படுத்த பாஜக முயல்வதாக குற்றம்சாட்டினார்.
இது குறித்து பிபிசி தமிழோசையிடம் பேசிய பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், ''அதிமுகவை பலப்படுத்துவது அந்த கட்சியின் பொறுப்பு. அந்த கட்சியை உடைப்பதற்கான தேவை எங்களுக்கு இல்லை. எங்களது கட்சியை தமிழகத்தில் பிரதான கட்சியாக மாற்ற நாங்கள் உழைத்து வருகிறோம்,''என்றார் .
அவர் மேலும் திமுக மற்றும் அதிமுக கட்சியின் ஆட்சியால் கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தில் வளர்ச்சி ஏற்படவில்லை என்றார்.
''பல கட்சிகளில் இருந்து எங்களது கட்சிக்கு வந்து பெறுபவர்களை நாங்கள் உதாசீனப்படுத்துவது இல்லை. தமிழகத்தில் பிரதமர் நரேந்திர மோதியின் ஆட்சி வரவேண்டும் என ஒட்டு மொத்த தமிழகமும் விரும்புகிறது. அவரது கொள்கைகளை விரும்புபவர்கள் எங்களுடன் உள்ளனர். அவர்கள் எங்களோடு இணைவதால் எங்களது கட்சிக்கு பலர் வருகின்றனர்,'' என்றார். ,'' என்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
எங்களது செய்திகளை முகநூலில் படித்து கருத்துக்களை தெரிவிக்க : பிபிசி தமிழ் பேஸ்புக்
ட்விட்டரில் எங்களை பின்தொடர : பிபிசி தமிழ் டிவிட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யூ ட்யூபில் காண ;பிபிசி தமிழ் யு டியூப்












