மலேசியாவில் ஜிகா வைரஸால் பாதிப்படைந்த முதல் பெண்
தனது நாட்டில் உள்ள ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு ஜிகா வைரஸ் தொற்று இருப்பதை சோதனையில் கண்டறிந்த மலேசியா, தனது நாட்டின் முதல் ஜிகா வைரஸ் தொற்றினை உறுதி செய்துள்ளது.

பட மூலாதாரம், .
கருவில் இருக்கும் குழந்தைகள் குறைபாட்டுடன் பிறக்க காரணமாக இந்த ஜிகா வைரஸ் காரணமாக அமைவதாக கூறப்படுகிறது.
ஜிகா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட சில பெண்களுக்கு பிறந்த குழந்தைகள் வழக்கத்துக்கு மாறாக சிறிய மூளை மற்றும் தலையுடன் இருந்தது குறிப்பிடத்தக்கது.

பட மூலாதாரம், Reuters
தனது நாட்டில் முதல் ஜிகா வைரஸ் தொற்றினை கடந்த வாரம் மலேசியா கண்டறிந்தது. 250 பேருக்கும் மேல் ஜிகா வைரஸ் தோற்றால் பாதிப்படைந்ததுள்ள அருகாமை நாடான சிங்கப்பூர், ஜிகா வைரஸ் தொற்று பரவலை தடுக்க கடுமையாக போராடி வருகிறது.
மலேசியாவில் ஜிகா தொற்றால் பாதிப்பைடைந்துள்ள பெண்ணின் கணவர் சிங்கப்பூரில் பணிபுரிகிறார் என்று கருதப்படுகிறது.








