ஏவுகணை சோதனையால் மிரட்டும் வடகொரியா

பட மூலாதாரம், EPA
ஜி20 நாடுகள் உச்சி மாநாட்டின்போது, தென் கொரிய அதிபர் பாக் குன்ஹெ-யும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் சந்தித்த சில மணி நேரங்களில், கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் மூன்று ஏவுகணைகளை வட கொரியா கிழக்கு கடலில் சோதித்து இருப்பதாக தென் கொரிய ராணுவம் கூறியுள்ளது.
அணு ஆயுத மற்றும் ஏவுகணை சோதனைகளை நடத்தி வட கொரியா வழங்கி வரும் தொடர் ஆத்திரமூட்டல்கள் என்று அவர் கூறியவை தொடர்பாக, வட கொரியாவின் நட்பு நாடான சீனாவோடு நெருங்கிய ஒத்துழைப்பை உருவாக்குவதை பாக் குன்ஹெ வலியுறுத்தினார்.
அதே நேரத்தில், தென் கொரியாவில் ஏவுகணை தடுப்பு அமைப்பை அமெரிக்கா அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஷி ஜீன்பிங், அவ்வாறு செய்வது சர்ச்சைகளை தீவிரப்படுத்தும் என்று கூறியதாக சீன அரசின் ஊடகம் தெரிவித்திருக்கிறது.








