மரண தண்டனையும் அதன் சிக்கல்களும்

1998 ஆம் ஆண்டில் 35 நாடுகள் மட்டுமே மரண தண்டனையை ஒழித்திருந்தன. ஆனால் தற்போது அது மூன்று மடங்காக உயர்ந்துள்ளது.

உலகின், மரண தண்டனை குறித்த இந்த அணுகுமுறை சிக்கலான பல உண்மைகளை மறைக்கிறது.

பாரிஸில் உள்ள ஆர்வலர்கள், இரான் அதிபர் ஹசான் ரொளஹானி மரண தண்டனையை பயன்படுத்துவதற்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

பட மூலாதாரம், Getty

படக்குறிப்பு, பாரிஸில் உள்ள ஆர்வலர்கள், இரான் அதிபர் ஹசான் ரொளஹானி மரண தண்டனையை பயன்படுத்துவதற்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

குறிப்பாக, ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் 39 நாடுகளில் மரண தண்டனை நடைமுறையில் உள்ளது; அதில் அமெரிக்காவும் அடங்கும்.

சர்வதேச மன்னிப்பு சபையான அம்னெஸ்டியின்படி தகவல்படி, 2015 - ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்ட நபர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது; 1989 - ஆம் ஆண்டுதான் அதிகப்படியான எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

அதில் 90 சதம் இரான், பாகிஸ்தான், செளதி அரேபியா ஆகிய மூன்று நாடுகளின் பங்குகள் உள்ளன. மரண தண்டனையின் எண்ணிக்கையை ரகசியமாக வைத்துள்ளதால் சீனா இதில் சேர்க்கப்படவில்லை.

மரண தண்டனை என்பது பெயரளவில் மட்டும் நிலவும் நாடுகளும் உள்ளன.

வழக்கத்திற்கு மாறான குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவதை ஆறு நாடுகள் அமலில் வைத்துள்ளது. எடுத்துக்காட்டாக, இஸ்ரேலில் இனப்படுகொலை மற்றும் போர் சமயங்களில் புரியும் தேசத்துரோக குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும்.

பொதுவாக இந்த நாடுகளில் பல வருடங்களாக மரண தண்டனை வழங்கப்படவில்லை; பிரேசிலில் போர் சமயத்தில் புரியப்படும் ராணுவக் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்கப்படும். ஆனால் அந்நாடு 1855 ஆம் ஆண்டிலிருந்து யாருக்கும் மரண தண்டனை வழங்கவில்லை.

பட மூலாதாரம்,

அதிகப்படியாக 49 நாடுகள் தனியொரு பிரிவில் உள்ளன; அவை மரண தண்டனையை அதிகமாக நிறைவேற்றிய நாடுகளை காட்டிலும் அதிகம். அந்நாடுகளில் சாதாரண குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவது சட்டப்படியானது. அதில் பாதி நாடுகள் கடந்த ஐந்து வருடங்களில் குறைந்தது ஒரு மரண தண்டனையாவது வழங்கியுள்ளது.

அதில் பெரும்பாலானவை இரான் மற்றும் செளதி அரேபியாவிலிருந்து மாறுபடுகிறது; அங்கு சில குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்கப்படுகிறது என்ற போதிலும் நூற்றுக்கணக்கிலோ அல்லது ஆயிரக்கணக்கிலோ வழங்கப்பட்டால் அந்த தண்டனை நிறைவேற்ற படமாட்டாது.

மரண தண்டனை வழங்குவது நடப்பில் இருந்தாலும், பத்து வருடங்களாக யாருக்கும் மரண தண்டனை வழங்கப்படாமல் இருந்தால் அவை “மரண தண்டனை ஒழிப்பு நடைமுறையில் இருக்கும் நாடுகள்” என்று அழைக்கப்படுகிறது.

மரண தண்டனைகளுக்கு எதிராக வாதிட உலகமுழுவதும் வழக்கறிஞர்களை அனுப்பும் மரண தண்டனை திட்டத்தின் பர்வரிஸ் ஜப்பர், கென்யாவை எடுத்துக்காட்டாக கூறியுள்ளார்.

கென்யாவில் கொலை மற்றும் பெரிய அளவு கொள்ளை உள்ளிட்ட சில குற்றங்களுக்கு கட்டாய மரண தண்டனை வழங்கப்படுகிறது என அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

முப்பது ஆண்டுகளில் கென்யாவில் மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை என்றாலும் அங்கு 4000 பேர் மரண தண்டனை பெற்றிருக்கின்றனர்.

பட மூலாதாரம், AP

காமன்வெல்த் கரிபியனைச் சேர்ந்த அனைத்து 12 நாடுகளும், பத்து வருடங்களில் மரண தண்டனை வழங்கியுள்ளது என ஜப்பர் தெரிவித்துள்ளார்.

“மரண தண்டனை சட்டரீதியான தண்டனை என்பதால் அது வழங்கப்படுகிறது ஆனால் அது நிறைவேற்றப்படுவதில்லை” எனவும் அவர் தெரிவித்தார்.

பட மூலாதாரம்,

பிற நாடுகளை காரணம் காட்டி மரண தண்டனைக்கு எதிராக வாதிடும் சர்வதேச வழக்கறிஞர்களால்தான், சில நாடுகள் மரண தண்டனை வழங்கிய பின்னும் அதை நிறைவேற்றாமல் இருக்கிறது.

பெலிசியில் 1999 ஆம் ஆண்டு, மரண தண்டனைப் பெற்ற ஒரு தனி கொலை வழக்கு ஆயுள் தண்டனையாக மாறியது. ஆப்ரிக்கா மற்றும் தென் கிழக்கு ஆசியாவில், காமன்வெல்த் கரிபியன் பகுதிகளின் பிற நாடுகளில் இது மாற்றங்களை ஏற்படுத்தியது.

அவர்களின் முயற்சியின் விளைவாக நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான பேர் மரண தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டனர் என்று ஜாபர் தெரிவித்தார்.

ஆனால் மற்ற இடங்களில் நிலைமை தலைகீழாக மாறியது; மரண தண்டனை ஒழிப்பு நடைமுறையில் உள்ள சாட் போன்ற நாடுகள் மரண தண்டனையை நிறைவேற்ற தொடங்கியது. மேலும், மாலத்தீவு மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய நாடுகள் அவ்வாறு செய்யப்போவதாக அச்சுறுத்தின.

நாடுகள் தங்களின் கடுமையான தண்டனையான மரண தண்டனையை நீண்ட காலத்திற்கு நிறைவேற்றாமல் இருந்தாலும் மரண தண்டனை பெற்றவர்கள் அப்பயதிலிருந்து விடுபட வாய்ப்பில்லை என்பதே உண்மை.