காதல் - திருமணம்: ஒலிம்பிக் போட்டியில் அரங்கேறிய மகிழ்ச்சி தருணம்

ரியோ ஒலிம்பிக்கில் யாரும் எதிர்பாராத விதமாக சீன வீரர் ஒருவர், சக வீரரும் தனது தோழியுமான பெண்ணிடம் திருமணத்திற்கான சம்மதத்தைக் கேட்டது சீன ஊடங்களில் ஒலிம்பிக் விளையாட்டைக் காட்டிலும் அதிக கவனத்தைப் பெற்றுள்ளது.

இருவரும் 6 வருடங்களாக நண்பர்களாக உள்ளனர்

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, இருவரும் 6 வருடங்களாக நண்பர்களாக உள்ளனர்

ஞாயிறன்று பெண்களுக்கான மூன்று மீட்டர் வளையும் மேடையிலிருந்து நீரில் தலைகீழாக குதிக்கும் போட்டியில் சீன வீரர் ஹெ ட்ஸீ வெள்ளிப்பதக்கத்தை வென்ற சில மணி நேரங்களில் அவரின் ஆண் நண்பர் மற்றும் சக நீரில் குதிக்கும் வீரரான ஷின் கா மேடைக்கு வந்து அவரை நெருங்கினார்.

சின் கா தன்னை நெருங்கியவுடன் அதிர்ச்சியில் ஆழ்ந்தார் ஹெ ட்ஸு

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, சின் கா தன்னை நெருங்கியவுடன் அதிர்ச்சியில் ஆழ்ந்தார் ஹெ ட்ஸு

மில்லியன் கணக்கில் கூடியிருந்த பார்வையாளர்களுக்கு மத்தியில் மண்டியிட்டு, அவரின் முன் மோதிரம் ஒன்றை நீட்டினார்.

அதிர்ச்சியில் இருந்த ஹெ ட்ஸீ கண்ணீர் மல்க தனது சம்மதத்தை தெரிவித்தார்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அதிர்ச்சியில் இருந்த ஹெ ட்ஸீ கண்ணீர் மல்க தனது சம்மதத்தை தெரிவித்தார்

சமூக ஊடங்களில் இது குறித்து மக்கள் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தாலும், ஒரு புறம் ஹெ ட்ஸீ மீது ஒப்புக் கொள்ள வேண்டும் என்ற அதிக அழுத்தத்தை அளித்ததாகவும், விளையாட்டில் அவர் நிகழ்த்திய சாதனை மழுங்கடிக்கும் வண்ணம் இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த தருணத்தை ஒலிம்பிக்கின் ஆயிரக்கணக்கான் கேமாராக்கள் பதிவு செய்தது

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, இந்த தருணத்தை ஒலிம்பிக்கின் ஆயிரக்கணக்கான் கேமாராக்கள் பதிவு செய்தது