பனாமாவின் நிதி அமைப்பு புலனாய்வு ஆணையத்திலிருந்து சுவிஸ் ஊழல் எதிர்ப்பு நிபுணர் விலகல்

பட மூலாதாரம், Getty

அரசின் தலையீடு காரணமாக, பனாமாவின் நிதி அமைப்பை புலனாய்வு செய்யும் ஆணையத்திலிருந்து தான் விலகியுள்ளதாக சுவிஸ் ஊழல் எதிர்ப்பு நிபுணர் மார்க் பெய்த் தெரிவித்திருக்கிறார்.

இந்த ஆணையத்தின் கண்டுபிடிப்புகளை வெளியிட வேண்டுமா என்பதில் பனாமா ஆட்சியாளர்கள் தான் இறுதி முடிவு எடுப்பதாக தெரிவிக்கின்ற கடிதத்தை பனாமா அரசிடமிருந்து தான் பெற்றிருப்பதாக அவர் பிபிசியிடம் தெரிவித்திருக்கிறார்.

பட மூலாதாரம், Reuters

இந்த குழு அறிக்கையின் வரைவு ஒன்றை, அது சரியாக எழுதப்படுவதற்கு முன்னரே, இந்த ஆணையத்தில் இருக்கின்ற பானாமா நாட்டு உறுப்பினர்கள் அதிபருக்கு ஏற்கெனவே வழங்கிவிட்டதாக அவர் கூறியிருக்கிறார்.

பனாமா ஆவணங்கள் என்று அறியப்படும் மில்லியன்கணக்கான சட்ட நிறுவனங்களின் ஆவணங்கள் கசிய தொடங்கி, உலகிலுள்ள பணக்காரர்கள் மற்றும் அதிகாரத்தில் இருப்போர் செய்த வரி ஏய்ப்பு மற்றும் பண மோசடிகள் பற்றிய பெரிய வலையமைப்பு தெரிய வந்ததை அடுத்து இந்த புலனாய்வு தொடங்கியது.

முன்னதாக, அமெரிக்காவின் நோபல் பரிசை வென்ற பொருளியலாளர் ஜோசப் ஸ்டிக்லிடஸ் இந்த ஆணையத்திலிருந்து பதவி விலகினார்.