மது குடிப்பதால் உண்டாகும் 7 வகை புற்றுநோய்: ஆராய்ச்சியில் தகவல்

பட மூலாதாரம், ThinkStock

மது குடிப்பதற்கும் ஏழு வகையான புற்றுநோய்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.

உடல்கூறியல் ரீதியான காரணங்கள் தெளிவாக இல்லாவிட்டாலும், `அடிக்ஷன்' என்ற மருத்துவ சஞ்சிகையில் வெளியான ஆராய்ச்சி முடிவுகளின்படி, மதுகுடிப்பதற்கும் புற்றநோய் ஏற்படுவதற்கும் நேரடித் தொடர்பு இருப்பதாக முடிவுகள் தெரிவிக்கின்றன.

மது குடிப்பதால், வாய், தொண்டை, குரல்வளை, உணவுக்குழாய், கல்லீரல், பெருங்குடல், சிறுகுடல் மற்றும் மார்பகம் ஆகிய பகுதிகளில் புற்றுநோய் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Alfred PasiekaSPL

பிரிட்டனின் தலைமை மருத்துவ அதிகாரி கடந்த ஜனவரி மாதம் இதுகுறித்து கூறுகையில், எந்த அளவு மது குடித்தாலும், அது தொடர் பழக்கமாக இருக்கும் நிலையில், ஆபத்தில்லாத குடிப்பழக்கம் என எதுவும் இல்லை என்று தெரிவித்திருந்தார்.

கடந்த 2012-ம் ஆண்டில் மட்டும், மதுப்பழக்கத்தால் ஐந்து லட்சம் பேர் உயிரிழந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.