சீனாவில் மனித உரிமை வழக்கறிஞர் மீது வழக்கு
சீன அதிகாரிகள், பிரபல மனித உரிமை வழக்கறிஞர் மற்றும் மூன்று சட்ட ஆர்வலர்களை அரசு அதிகாரத்தை திசைதிருப்பியதாக அவர்கள் மீது வழக்குத் தொடுக்கவுள்ளதாக தெரிவித்தனர்.

வழக்கறிஞர் சௌ ஷிபெங் மற்றும் அவரின் மூன்று சக ஊழியர்களும் அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் காவலில் வைக்கப்பட்டனர்.
ஒரு ஆண்டுக்கு முன்பு சீன எதிர்தரப்பு வழக்கறிஞர்கள்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சீன அரசியலில், அரசுக்கு எதிரான முக்கிய தலைவர்கள் சிலரது சார்பில் போராடும் ஒரு சில சட்ட நிறுவனங்களில் செள ஷிபெங்கின் நிறுவனமும் ஒன்று.
தங்களுக்குப் பதிலாக அரசால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்கள் அமர்த்தப்பட்டுள்ளார்கள். இது வழக்கின் தீவிர நிலையை காட்டுகிறது என்று செளவின் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.








