அடுத்த தலைவர் குறித்து தாலிபான்கள் விவாதம் ?

ஆப்கான் தாலிபானின் அடுத்த தலைவர் யார் என அதன் மூத்த உறுப்பினர்களிடையே விவாதம் தொடங்கியுள்ளதாக மேற்கு பாகிஸ்தானிலிருந்து வரும் செய்திகள் கோடிட்டு காட்டுகின்றன.

afghan taliban

கடந்த ஞாயிறன்று குவெட்டாவில் நடந்த ஷுரா என அழைக்கப்படும் ஆரம்ப நிலைக் கூட்டம் அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதலில் முன்னாள் தலைவர் முல்லா அக்தர் மன்சூர் உயிரிழந்தது குறித்த முதல் மறைமுக ஒப்புதல் ஆகும்.

திங்கட்கிழமையன்று(இன்று) நடைபெற இருக்கும் அடுத்த கட்ட கூட்டத்தில் அவரது வாரிசை நியமிப்பதற்கான நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க அதிபர் ஒபாமா திங்களன்று முல்லா அக்தர் மன்சூர் உயிரிழந்ததை உறுதிப்படுத்தியதுடன் தாலிபான்களை அமைதிப் பேச்சு வார்த்தைகளில் சேர்ந்து கொள்ளுமாறு அழைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.