பருவ நிலை மாற்றம்:''கொல்கத்தா,மும்பை நகரங்கள் வெள்ள அபாயத்தை எதிர்கொள்கின்றன''

பருவ நிலை மாற்றத்தின் காரணமாக 2060ல் ஒரு பில்லியனுக்கும் அதிகமானோர், பேரழிவை ஏற்படுத்தக்கூடிய வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாய சூழலில் வாழ்வார்கள் என 'கிரிஸ்டியன் எய்டு'என்ற நிறுவனம் எச்சரிக்கிறது.

கொல்கத்தா, மும்பை நகரங்களில் வெள்ள பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது .

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, கொல்கத்தா, மும்பை நகரங்களில் வெள்ள பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது .

மிக மோசமாக கார்பன் படிமங்களைப் பயன்படுத்துவதால் மாசை ஏற்படுத்தும் மூன்று நாடுகளான, அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் , கடல் நீர் மட்டம் உயர்வது, புயல் சீற்றம் மற்றும் அதீத காலநிலை ஆகியவற்றால் ,அதிக மழை, புயல் சீற்றம் போன்ற காரணங்களால் அதிக அச்சுறுத்தலுக்கு ஆளாகும் நாடுகளில் முக்கியமானவை என்று அந்த நிறுவனம் கூறுகிறது.

அதிக பாதிப்புக்கு ஆளாகும் கடலோர நகரங்களின் வரிசையில் கொல்கத்தாவும், மும்பையும் இருப்பதாக அது கூறுகிறது.

கொல்கத்தா நகர வீதிகளில் மக்கள் இந்த எச்சரிக்கை குறித்து கவலையும் ஆச்சரியத்தையும் வெளியிட்டனர்.

ஆய்வை மேற்கொண்ட அலிசன் தோயக், ''கொல்கத்தா, தாக்கார் ஆகிய வளர்ந்து வரும் பொருளாதாரங்களையும், வறிய நாடுகளையும் சேர்ந்த பெரு நகரங்களில் வசிக்கும் மக்கள்தான், கடல் மட்ட உயர்வு மற்றும் அதிக மழை போன்றவைகளால் பாதிக்கப்படக்கூடியவர்கள் . தங்களது உயிரையும், உடமைகளையும் அவர்கள் இழக்க நேரிடும் என்றார்.