ஆஸி.யில் தனது இராணுவப் பயிற்சி தளங்களை விஸ்தரிக்கும் சிங்கப்பூர்
ஆஸ்திரேலியாவில் உள்ள சிங்கப்பூரின் இராணுவப் பயிற்சித் தளங்களை விஸ்தரிப்பதற்காக ஒன்றரை பில்லியன் டாலருக்கும் அதிகமான நிதியை சிங்கப்பூர் செலவிட உள்ளது.

பட மூலாதாரம்,
இரண்டு நாடுகளுக்கும் இடையேயான 25-ஆண்டு ஒப்பந்தம் ஒன்றை ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் அறிவித்துள்ளார்.
தமது படையினருக்கு பயிற்சி வழங்குவதற்கு 700 சதுரக் கிலோமீட்டர் பரப்பளவான இடவசதி போதாதுள்ளமையினால் சிங்கப்பூர் தனது படையினரை குயின்ஸ்லாந்தில் உள்ள பயிற்சித் தளத்திற்கு அனுப்பி வருகிறது.
சீனாவின் அதிகரித்து வரும் இராணுவ வல்லமைக்கு சீங்கப்பூரின் பதில் நடவடிக்கை இது என்று துறைசார் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.








