`அழகு சிகிச்சை மோசடி', ஹாங்காங்கில் பெண்கள் கைது
மருத்துவ சிகிச்சை வழங்குவதில் மோசடி செய்ததாக ஹாங்காங்கிலுள்ள அழகு நிலையத்தில் 11 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பட மூலாதாரம், AFP
குற்றச்சாட்டுகளை அடுத்து, அங்கு அதிரடியாகச் சென்ற காவல்துறையினர் அந்த நிலையத்தில் திடீர் சோதனை நடத்தி அவர்களைக் கைது செய்துள்ளனர்.
ஆக்சிஜன் இன்ஹேலேஷன் மற்றும் அகச்சிவப்பு விளக்கு மூலமான ஒளி சிகிச்சைகள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுவதுடன் அவற்றுக்கென, 7 பேர் மட்டும் மொத்தமாக ஆறு லட்சம் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான பணத்தை செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நிலையத்தில் சிகிச்சை பெறுவோர் வேறு எந்த மருத்துவ சிகிச்சைகளையும் பெற்றுக் கொள்ள மாட்டோம் என்று கையொப்பமிட வலியுறுத்தப்பட்டனர் எனவும் காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது.
அங்கு சென்ற நோயாளிகள், புற்றுநோய் மற்றும் மனஅழுத்தம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர்.








