காங்கோ இசை நட்சத்திரம் பப்பா வெம்பா இசை அரங்கில் விழுந்து மரணம்

காங்கோ இசைக் குழுத் தலைவர் பப்பா வெம்பா, ஐவரிகோஸ்ட்டில் இசை நிகழ்ச்சி ஒன்றின் போது அரங்கிலேயே விழுந்து மரணமடைந்துள்ளார்.

பப்பா வெம்பா அரங்கில் வீழ்ந்து மரணம்
படக்குறிப்பு, பப்பா வெம்பா அரங்கில் வீழ்ந்து மரணம்

அவருக்கு வயது 66. சொகோஸ் இசையை ஆப்பிரிக்கா முழுவதும் இவர் மிகவும் பிரபலப்படுத்தினார்.

1970, 80களில் காங்கோலிய இசை வடிவத்துக்கு சர்வதேச அரங்கில் ஓர் அங்கீகாரத்தை பெற்றுக்கொடுத்த பப்பா வெம்பாவின் இயற்பெயர் ஜூல்ஸ் விபாடியோ.

இவர் அவ்வப்போது பல்வேறு சர்ச்சைகளுக்கும் உள்ளாகியவர். இராணுவ ஜெனரல் ஒருவரின் மகளுடன் உறவு வைத்திருந்தமைக்காக சிறைவைக்கப்பட்டார்.

தனது இசைக் குழுவின் உறுப்பினர்களாக காண்பித்து சட்டவிரோதக் குடியேறிகளை ஐரோப்பாவுக்குள் அழைத்து வந்த ஆட்கடத்தலில் ஈடுபட்டதாக 2003-இல் பெல்ஜியத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.