மொரீஷியஸ் கடற்பகுதியில் காணாமல் போன மலேசிய விமானத்தின் பாகம்?
இந்தியப் பெருங்கடலில் இருக்கும் மொரீஷியஸ் தீவின் கடற்பகுதியில் கண்கெடுக்கப்பட்ட உலோகப் பகுதி ஒன்றை ஆஸ்திரேலிய அதிகாரிகள் பரிசோதிக்கவுள்ளனர்.

பட மூலாதாரம், AFP
அந்த உலகோகப் பகுதி இரண்டு ஆடுகளுக்கு முன்னர் காணாமல் போன மலேசிய விமானம் எம் எச் 370ன் ஒரு பகுதியா என்பதை அதிகாரிகள் ஆராய்வார்கள்.
இதேவேளை கிழக்கு ஆப்ரிக்க கடற்பகுதியில் கிடைக்கப்பெற்ற இரண்டு விமானத் துண்டுகள் காணாமல் போன அந்த விமானத்துடையதே என்பதை தாங்கள் கிட்டத்தட்ட உறுதியாக நம்புவதாக கடந்த மாதம் விசாரணையாளர்கள் தெரிவித்திருந்தனர்.

காணமால் போன அந்த விமானத்தை இந்தியப் பெருங்கடலின் தொலைதூரப் பகுதியில் தேடும் நடவடிக்கையை ஆஸ்திரேலியா முன்னெடுத்திருந்தது.

பட மூலாதாரம், Reuters
கோலாம்பூரிலிருந்து பீஜிங் நோக்கிச் 239 பேருடன் சென்றுகொண்டிருந்த அந்த விமானம் திடீரெனக் காணமால் போனது.
அந்த விமானத்துக்கு என்ன ஆனது என்பது இன்றுவரை மர்மமாகவே உள்ளது.








