'ஸீக்கா தடுப்புமருந்து மிகவும் தாமதமாகலாம்'

பட மூலாதாரம், AP
லத்தீன் அமெரிக்காவில் தற்போது பரவிவருகின்ற ஸீக்கா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு உதவ முடியாத அளவுக்கு அதற்கான தடுப்பு மருந்துகள் மிகவும் தாமதாகவே உருவாக்கப்படக்கூடும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
மிகவும் முன்னேற்றம் கண்டுள்ள பரீட்சார்த்த தடுப்புமருந்துகள் கூட, மனிதர்களிடத்தில் சோதனையிடப்படுவதற்கு இன்னும் பல மாதங்கள் தேவைப்படலாம் என்று உலக சுகாதார நிறுவனத்தின் துணை தலைமைச் செயலர் டாக்டர் மேரி போல் கேனி கூறினார்.
ஆனால், கர்ப்பிணி தாய்மார் மற்றும் குழந்தை பெற்றுக்கொள்ளும் வயதில் உள்ள பெண்களுக்கு பொருத்தமான தடுப்புமருந்துகளை கண்டுபிடிக்க வேண்டியது மிகவும் அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.
குழந்தைகளின் மூளையில் மிகவும் அரிதான மூளை பாதிப்பை இந்த இந்த ஸீகா வைரஸ் தான் ஏற்படுத்துவதாக மிகவும் உறுதியாக சந்தேகிக்கப்படுகின்றது.








