டைட்டானிக் 'மெனு' ஒரு லட்சத்து 19 ஆயிரம் டாலருக்கு ஏலம் போனது

டைட்டானிக் கப்பல் 1912-ம் ஆண்டு மூழ்கியது

பட மூலாதாரம், other

படக்குறிப்பு, டைட்டானிக் கப்பல் 1912-ம் ஆண்டு மூழ்கியது

டைட்டானிக் கப்பல் மூழ்குவதற்கு முன்னதாக கடைசியாக அளிக்கப்பட்ட இரவு விருந்தின் உணவுப் பட்டியல் (மெனு) கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 19 ஆயிரம் டாலருக்கு அமெரிக்காவில் ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.

சூப்பர் வகுப்பு பயணிகளுக்கு அளிக்கப்பட்ட மெனுவில் ஆய்ஸ்டர்ஸ் எனப்படும் சிப்பி உணவு, மாட்டிறைச்சி, வாத்துக் குஞ்சு வறுவல் உள்ளிட்ட உணவுகள் இடம்பெற்றுள்ளன.

1912-ம் ஆண்டில் டைட்டானிக் கப்பல் மூழ்கியபோது, அதில் பயணித்தவர்களில் 1500க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர்.

ஜான் எஃப் கென்னெடி 1963-ம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டார்

பட மூலாதாரம், AP

படக்குறிப்பு, ஜான் எஃப் கென்னெடி 1963-ம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டார்

அமெரிக்க அதிபர் ஜான் எஃப் கென்னெடி சுட்டுக்கொல்லப்பட்ட காரின் ஜிஜி-300 என்ற லைசென்ஸ் தகடும் இந்த ஏலத்தில் ஒரு லட்சம் டாலருக்கு விற்கப்பட்டுள்ளது.

ஜான் எஃப் கென்னெடி 1963-ம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டார்.