19-ம் நூற்றாண்டு கத்தோலிக்க தம்பதியருக்கு 'புனிதர்' பட்டம்

பட மூலாதாரம், Sanctuaire DAlencon
பிரான்ஸில் 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த தம்பதியர் இருவருக்கு கத்தோலிக்கர்களின் 'புனிதர்கள்' பட்டம் வழங்கும் நிகழ்வு வத்திகானில் பாப்பரசர் பிரான்சிஸ் தலைமையில் நடக்கின்றது.
கணவன்-மனைவி இருவரையும் ஒரே நேரத்தில் புனிதர்களாக ரோமன் கத்தோலிக்கத் திருச்சபை கௌரவப்படுத்தும் முதல் சந்தர்ப்பம் இதுவே.
லூயிஸ் - ஸெலீ மார்ட்டின் தம்பதியர் 9 பிள்ளைகளை பெற்றிருந்தனர். அவர்களில் நால்வர் குழந்தைப் பருவத்திலேயே உயிரிழந்துவிட்டனர்.
மற்ற எல்லாப் பிள்ளைகளும் கன்னியாஸ்திரிகள் ஆகினர்.
அவர்களில் இளையவரான தெரேஸ் டி லிஸியோக் 90 ஆண்டுகளுக்கு முன்னர் புனிதராக திருநிலைப்படுத்தப்பட்டார்.
கத்தோலிக்கர்களின் பல புதிய தலைமுறையினருக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தவராக அவர் பார்க்கப்பட்டார்.








