'ஆப்கன்- தாலிபன் பேச்சுக்களை பாகிஸ்தான் நடத்திவைத்துள்ளது'

ஆப்கானிஸ்தானில் நடந்துவரும் நீண்டகால ஆயுதக்கிளர்ச்சிக்கு முடிவுகாணும் நோக்குடன், அந்நாட்டு அரசாங்கத்துக்கும் தாலிபன் பிரதிநிதிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை முன்னின்று நடத்திவைத்ததாக பாகிஸ்தான் உறுதிப்படுத்தியுள்ளது.
இஸ்லாமாபாத்துக்கு வடக்காக உள்ள மலைப்பகுதி ஒன்றில் கடந்த செவ்வாயன்று இந்த சந்திப்பு நடந்ததாகவும் பாகிஸ்தான் கூறியுள்ளது.
இந்த பேச்சுக்களில் சீனா மற்றும் அமெரிக்காவின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டதாக கூறப்படுகின்றது.
நம்பிக்கையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் தேவைப்படுவதாக இரண்டு தரப்பினரும் உணர்ந்துள்ளதாகவும் ரமலான் முடிந்த பிறகு மீண்டும் சந்திப்பதற்கு இணங்கியுள்ளதாகவும் பாகிஸ்தான் கூறியுள்ளது.
ஆப்கன் தரப்பில் துணை வெளியுறவு அமைச்சர் ஹெக்மாட் கலீல் கர்சாய் இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டது, முக்கிய முன்நகர்வாக பார்க்கப்படுவதாக செய்தியாளர்கள் கூறுகின்றனர்.








