காணமல் போன மலேசிய விமானம் தொடர்பில் நஷ்டஈடு
மலேசியாவின் விமான நிறுவனத்துக்கு எதிராக அந்நாட்டைச் சேர்ந்த இரண்டு சிறார்கள் கொண்டுவந்த வழக்கு நீதிமன்றத்துக்கு வெளியே எட்டப்பட்ட உடன்பாட்டின் மூலம் தீர்க்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், AFP
தமது தந்தை பயணித்த விமானம் காணாமல் போன சம்பவம் தொடர்பில், மலேசியன் ஏர்லைன்ஸ் கவனக் குறைவாக இருந்தது என அந்தச் சிறுவர்கள் வழக்கை முன்னெடுத்தனர்.
மலேசிய விமானம் எம்எச்370 நடு வானில் காணாமல் போன பிறகு முதலாவதாகக் கொண்டுவரப்பட்ட வழக்கு இதுதான் என்று நம்பப்படுகிறது. கோலாலம்பூரிலிருந்து பீஜிங்கிலிருந்து சென்று கொண்டிருந்தபோது காணாமல் போன அந்த விமானத்தில் 230க்கும் அதிகமானோர் இருந்தனர்.
தமது மகன்கள் வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில், தங்களது வழங்கப்படவுள்ள நட்ட ஈட்டை தாங்கள் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் அவர்களது தாய் தெரிவித்துள்ளார். எனினும் நட்ட ஈட்டுத் தொகை எவ்வளவு என்பது வெளியிடப்படவில்லை.
இதேவேளை காணாமல் போன அந்த விமானத்தை தேடும் பணி தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்தியப் பெருங்கடலில் தமது விமானம் காணாமல் போன சம்பவத்தை ஒரு விபத்து என்று மலேசியா அறிவித்துள்ளது.








