சவுதியில் ஸ்னோமேன் உருவங்கள் செய்வதற்கு மத ஆணைத் தடை

பட மூலாதாரம்,
சவுதி அரேபியின் பல பகுதிகளில் அபூர்வமான முறையில் பனிபொழிவு ஏற்பட்டுவரும் வேளையில், அந்தப் பனிக் கட்டிகளைக் கொண்டு ஸ்னோமேன் என்றழைக்கப்படும் பனிச்சிலைகள் உருவாக்குவதை தடைசெய்து மதகுரு ஒருவர் ஃபத்வா- மத ஆணையை பிறப்பித்துள்ளார்.
நன்கு அறியப்பட்ட மதகுருவான ஷேக் மொஹமட் சாலேஹ் அல் முனாஜித் பிறப்பித்துள்ள இந்த மத ஆணை சில காலத்துக்கு முன்னர் வெளியிடப்பட்டது போலத் தோன்றுகிறது.
பனிக்கட்டியில் மனித உருவத்தைச் செய்வது என்பது, மனிதனின் உருவத்தை செய்வதற்கு சமமே என்று கூறியுள்ள அவர், அப்படிச் செய்வது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
அவரது இந்த ஆணையை டிவிட்டர் மூலம் பலர் விமர்சித்துள்ளனர்.
சவுதி அரேபியாவிலுள்ள பலர் பனிக்கட்டிகளால் மணப்பெண்கள் போன்ற மனித உருவங்களையும் ஒட்டகங்கள் போன்ற மிருக உருவங்களையும் செய்து அவற்றின் நிழற்படங்களை வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, அசாதாரணமான வகையில் அங்கு பொழிந்துவரும் பனியை பலர் ரசித்து மகிழ்ந்து வருகின்றனர்.








